ETV Bharat / crime

பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட வேலை தேடிய பெண்! - Job-seeking woman

வேலை தேடி வந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்தனர்.

crime
crime
author img

By

Published : Jun 9, 2021, 9:15 PM IST

மதுரை: எல்லீஸ் நகர் ஹவுசிங் போர்டு பகுதியில் பாலியல் தொழில் நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து, அப்பகுதியில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து, அந்த பகுதியில் உள்ள வீட்டிற்கு வாடிக்கையாளர் போல சென்று சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர், சம்பந்தப்பட்ட கும்பலை கையும் களவுமாக பிடித்தனர். கைதான ராணி, ரைமான் பீவி, ராமசாமி, ரமேஷ், நிசாந்த் ஆகிய 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

அதில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பெற்றோரிடம் சண்டையிட்டு வெளியூருக்கு வேலை தேடி வந்த இளம்பெண்ணை, அக்கும்பல் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. தொடர்ந்து, அந்த இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டதுடன், கும்பலிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: கள்ளத்தனமாக விற்பனைக்கு கொண்டுவந்த 103 மதுபாட்டில்கள் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.