ETV Bharat / crime

திங்களூர் அருகே பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் நகை கொள்ளை - ஈரோடு மாவட்ட செய்திகள்

ஈரோடு: திங்களூர் அருகே உள்ள சுப்பையன்பாளையத்தில் நீதிமன்ற தலைமை எழுத்தரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.4 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் ரொக்கப் பணம் கொள்ளை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திங்களூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

erode district news
theft in court writer house
author img

By

Published : Aug 31, 2021, 12:12 AM IST

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள திங்களூர் சுப்பையன் பாளையத்தை சேர்ந்தவர் சாமியப்பன் என்பவரின் மனைவி விஜயா.

இவர் பெருந்துறை மாவட்ட உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக வேலை செய்து வருகிறார்.

விஜயா கடந்த 28ஆம் தேதி மேட்டூரில் உள்ள தனது தங்கையை பார்க்க சென்றுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் விஜயாவை தொடர்பு கொண்டு கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து விஜயா வந்து பார்த்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பீரோவில் வைக்கப்பட்டிருந்த 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒன்பதரை சவரன் நகை மற்றும் ரூ. 9 ஆயிரத்து 500ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதைக்கண்டு அதிர்ந்து போன விஜயா, கொள்ளை சம்பவம் குறித்து திஙகளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார், பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

அந்தப் பகுதிகளில் இதுவரை இவ்வாறு குற்றச் சம்பவங்கள் நடைபெறாத நிலையில், விஜயா விட்டில் நிகழ்ந்துள்ள கொள்ளை சம்பவத்தை அறிந்த அப்பகுதியினர் அச்சமடைந்துள்ளளனர்.

இதையும் படிங்க: துணிக்கடையில் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய பெண்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.