ETV Bharat / crime

திருமணம் செய்வதாக கூறி மோசடி - வலையில் சிக்கிய பெண் - காவல்துறையினர் விசாரணை

புதுச்சேரியில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த பெண்ணிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

tn_dgl_04_boycomplaint_girlsissue_visual_img_scr_tn10053

author img

By

Published : Aug 11, 2021, 3:31 PM IST

திண்டுக்கல்: செல்லாண்டியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்லப்பாண்டி. இவர் திருமணம் செய்வதற்காக கௌரி திருமண மையத்தின் மூலம் பெண் தேடி உள்ளார். அப்பொழுது இடைத்தரகர்கள் மூலம் புதுச்சேரி நேரு தெருவை சேர்ந்த சோபிகா என்ற பெண்ணை பார்த்துள்ளார். பெண் பிடித்துப்போகவே திருமணம் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

நிச்சயம் செய்த செல்லப்பாண்டி

அப்பொழுது தனக்கு தாய், தந்தை யாரும் இல்லை என்றும் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு சுனாமியில் இருவரும் இறந்து விட்டதாக பெண் சோபிகா கூறியுள்ளார். இதனை நம்பிய செல்லப்பாண்டி கடந்த மார்ச் 11ஆம் தேதி எளிமையான முறையில் புதுச்சேரியில் நிச்சயதார்த்தம் செய்துள்ளார். நிச்சயதார்த்தத்தின் போது ஒன்றரை பவுன் ஜெயின், பட்டுப்புடவை, 25,000 ரொக்க பணம் ஆகியவற்றை சோபிகாவிடம் கொடுத்துள்ளார்.

அதன்பின் சோபிகாவை புதுச்சேரியில் விட்டுவிட்டு செல்லப்பாண்டி திண்டுக்கல் வந்துள்ளார். பின்னர் ஐந்து மாதங்களாக எவ்விதமான தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளார் சோபிகா. இதனால் சந்தேகமடைந்த செல்லப்பாண்டி தனது உறவினரை அழைத்துக் கொண்டு புதுச்சேரியில் உள்ள சோபிகாவின் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் வீடு வாடகைக்கு விடப்படும் என பலகை இருந்துள்ளது.

மோசடியால் அதிர்ச்சி

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்லப்பாண்டி அருகில் உள்ளவரிடம் விசாரித்தபோது, அந்தப் பெண் மோசடிப் பேர்வழி என கூறியுள்ளனர். இதேபோல் பலரையும் திருமணம் செய்வதாக ஏமாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அந்தப் பெண்ணை பிடிப்பதற்காக திட்டம் தீட்டிய செல்லபாண்டி, சோபிகாவின் உறவினரை தொடர்பு கொண்டு திருமணத்திற்காக புடவை, நகைகளை எடுக்க வேண்டும் ஆகையால் திண்டுக்கல்லுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.

வலையில் சிக்கிய சோபிகா

இதனையடுத்து நேற்று(ஆகஸ்ட்10) திண்டுக்கல் வந்த சோபிகாவை பிடித்து மோசடி செய்தது தொடர்பாக கேட்டபொழுது, சோபிகா தான் செய்தது தவறு என்றும், தான் வாங்கிய நகை, பட்டுப்புடவை, பணம் ஆகியவற்றை திரும்பத் தருவதாக கூறியுள்ளார். இதனை ஏற்காத செல்லப்பாண்டி திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலையத்தில் திருமணம் செய்வதாக கூறி மோசடி செய்த சோபிகா மீது புகார் அளித்தார். தற்போது இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: ’மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் இனி அரசு விழா’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.