ETV Bharat / crime

அதிர்ச்சி வீடியோ: சொகுசு கார் மோதியதில் பம்பரம் போல் சுற்றிய ஆட்டோ! - இருவர் கைது

மதுபோதையில் சொகுசு காரில் வந்த இருவர் ஆட்டோவில் மோதிய விபத்து ஏற்படுத்திய சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி வீடியோ
அதிர்ச்சி வீடியோ
author img

By

Published : Jun 29, 2021, 11:01 PM IST

ஹைதராபாத்: மாதாபூரில் ஆடி கார் ஒன்று ஆட்டோ மீது மோதியதில், ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தின் சிசிடிவி காட்சியை சைபராபாத் காவல்துறையினர் தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் வெளியிட்டுள்ளனர்.

சுஜித் ரெட்டி , ஆஷிஷ் என்ற இருவர் ராயதுர்கத்தில் உள்ள நண்பரின் வீட்டில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்டுள்ளனர். பின்னர் போதையில் காரில் சென்ற இருவரும் மது அருந்திக் கொண்டே சென்றுள்ளனர். திடீரென்று சுஹித் ரெட்டி காரின் வேகத்தை அதிகப்படுத்தியுள்ளார்.

அதிர்ச்சி வீடியோ

இந்நிலையில், முன்னால் சென்ற ஆட்டோவின் பின்புறத்தில் மோதியுள்ளார். கார் மோதியதில் ஆட்டோ பம்பரம் போல் சுழன்று கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் பயண செய்த பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், ஆட்டோ டிரைவர் பலத்த காயமடைந்தார்.

ஆட்டோவில் மோதியதும் சுஜித், ஆஷிஷ் இருவரும் காரின் நம்பர் பிளேட்டுகளை அகற்றி சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளனர். பின்னர் சுஜித் தந்தை மற்றொரு டிரைவரை அழைத்துச் சென்று, அவர் தான் விபத்து ஏற்படுத்தியதாக காவல்துறையினரை நம்ப வைக்க முயன்றார்.

இதுகுறித்து காவல்துறையினர், இதனனுடைய உண்மையான சிசிடிவி காட்சிகள் இருப்பதாகக் கூறி இருவரையும் கைது செய்துள்ளனர்.

இதையும் படிங்க: viral video: 'ஸ்டாலினின் ஃபிட்னஸ் சீக்ரெட்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.