சேலம்: சந்தேகத்திற்கான முறையில் கணவன் உயிரிழந்த நிலையில், மனைவியைக் கைதுசெய்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள புள்ளகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் தயானந்தன், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரியா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் மகன் உள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தயானந்தன் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் வீட்டிலேயே இறந்துகிடந்தார். இதனையடுத்து தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் நல்லசிவம், காவல் ஆய்வாளர் தேவி உள்ளிட்டோர் அவரது மனைவி பிரியாவிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் கைரேகை வல்லுநர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இறந்த தயானந்தன் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தயானந்தன் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், அவரது மருமகள் பிரியாவை காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஆத்தூரில் தாலி செயின் பறிப்பு - பரபரப்பு சிசிடிவி காணொலி