ETV Bharat / crime

கொடூர துரோகத்தை மனைவிக்கு செய்த கணவன் - நண்பர்கள் உள்பட மூவர் கைது! - பண்ருட்டி எல் ஆர் பாளையம் ஜெயமணி

பண்ருட்டியில் பணத்திற்காக மனைவிக்கு மயக்க மாத்திரை கொடுத்து, தன் நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்திய கணவர் உள்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

பெண் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு செய்திகள், பெண் கற்பழிப்பு, பெண் சீரழிப்பு, குற்ற செய்திகள், க்ரைம் செய்திகள், crime news tamil, crime news cuddalore
மனைவியை நண்பர்களுக்கு விருந்தாக்கிய கணவன்
author img

By

Published : Jun 11, 2021, 7:18 PM IST

Updated : Jun 11, 2021, 8:46 PM IST

கடலூர்: மனைவியை நண்பர்களைக் கொண்டு பாலியல் வன்புணர்வுக்கு உள்படுத்திய கணவனின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பண்ருட்டி எல்.ஆர்.பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயமணி (31). இவர், சக்தி (21) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணை மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

குடிப்பழக்கம் அதிகம் கொண்ட ஜெயமணி, சக்தி ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது, அவருக்கு சத்து மாத்திரை தருவதாகக் கூறி தூக்க மாத்திரையைக் கொடுத்துள்ளார். அந்த மாத்திரையை சாப்பிட்ட சக்தி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார்.

மனைவிக்கு நண்பர்களுடன் இணைந்து பாலியல் தொல்லை

இதையடுத்து, பண்ருட்டி பி.ஆண்டிகுப்பத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (31) என்ற நண்பரை தனது வீட்டிற்கு அழைத்து வந்து, பணத்திற்காக மயக்க நிலையில் இருந்த மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய துணையாக இருந்துள்ளார்.

பணத்தாசை தலைக்கேறிய ஜெயமணி, தனது மற்றொரு நண்பரான செக்குமேடு தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (26) என்பவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். அப்போது, வீட்டில் இருந்த மனைவி சக்தியிடம் மணிகண்டனுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சக்தி, கணவரிடம் 'வேண்டாம்' என அழுது புலம்பியுள்ளார். இதில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, 'நான் சொல்வதை நீ செய்யாவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன்' என ஜெயமணி சக்தியை மிரட்டிய நிலையில், இது இதோடு நின்றுவிடும் என்று நினைத்து சக்தி சம்மதித்துள்ளார். ஆனால், ஜெயமணி இதுபோன்ற செயல்களைத் தொடர்ந்த நிலையில், சக்தி ஒருக்கட்டத்தில் உறுதியாக இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், 'நீ ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்தபோது உனக்குத் தெரியாமல் தூக்க மாத்திரையைக் கொடுத்து எனது நண்பர் சுந்தரமூர்த்தியை உன்னுடன் உடலுறவு கொள்ள வைத்தேன். நான் சொல்வதை நீ கேட்காவிட்டால் அதேபோல் மீண்டும் செய்ய நேரிடும்' என அதிர்ச்சித் தகவலை சக்தியிடம் கூறி ஜெயமணி மிரட்டியுள்ளார்.

கைது நடவடிக்கை

இதனைத் தொடர்ந்து வெகுண்டெழுந்த சக்தி, தனது குழந்தையை தூக்கிக் கொண்டு, அதே பகுதியிலுள்ள தாய் வீட்டிற்கு சென்று, தனக்கு நடந்த துயரச் சம்பவங்களை கூறி அழுதுள்ளார். பின்னர், இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சக்தி தரப்பில் புகார் கொடுக்கப்பட்டது.

பெண் பாலியல் வன்கொடுமை, கற்பழிப்பு செய்திகள், பெண் கற்பழிப்பு, பெண் சீரழிப்பு, குற்ற செய்திகள், க்ரைம் செய்திகள், crime news tamil, crime news cuddalore
கைது செய்யப்பட்ட ஜெயமணி, சுந்தரமூர்த்தி, மணிகண்டன்

இப்புகாரின் பேரில் ஆய்வாளர் ராதிகா வழக்குப்பதிவு செய்து ஜெயமணி, நண்பர்கள் சுந்தரமூர்த்தி, மணிகண்டன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தார். மேற்கொண்டு சம்பவம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மாஸ்க் இருந்தால் கணவருக்கு எப்படி முத்தம் கொடுப்பது! டெல்லியில் காவலர்களிடம் ஜோடி வாக்குவாதம்

Last Updated : Jun 11, 2021, 8:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.