ETV Bharat / crime

சென்னை விமான நிலையத்தில் தங்க பசை பறிமுதல் - crime news

சென்னை விமான நிலையத்தில் அமெரிக்காவிற்கு கடத்த முயன்ற 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகளும், சாா்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 32 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 675 கிராம் தங்கப்பசையும் சுங்கத் துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.

தங்க பசை பறிமுதல்
தங்க பசை பறிமுதல்
author img

By

Published : Oct 7, 2021, 8:20 AM IST

சென்னை: சார்ஜாவிலிருந்து ஏர் அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் நேற்று (அக்டோபர் 6) காலை சென்னை பன்னாட்டு விமான நிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது அந்த விமானத்தில் வந்த சென்னையைச் சேர்ந்த சக்திகுமார் கிருஷ்ணசாமி (29) என்ற பயணி, தன்னிடம் சுங்கத்தீர்வைச் செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறிவிட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார். ஆனால் அவா் மிகுந்த பதற்றத்துடன் சென்றதால் சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டு அவரை நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர், முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.

தங்கப்பசை பறிமுதல்

இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று முழுமையாகப் பரிசோதித்தனர். அவருடைய உள்ளாடைகளுக்குள், நான்கு நெகிழி டப்பா மறைத்துவைத்திருந்தார். அதை எடுத்து உடைத்துப் பாா்த்தபோது அதனுள் 675 கிராம் தங்கப்பசை மறைத்துவைக்கப்பட்டிருந்தது.

அதன் பன்னாட்டு மதிப்பு 32 லட்சத்து 44 ஆயிரம் ரூபாயாகும். இதையடுத்து அந்தப் பயணியைச் சுங்கத் துறையினர் கைதுசெய்து விசாரணை நடத்துகின்றனர்.

தங்க பசை
தங்கப்பசை

இதற்கிடையே நேற்று (அக். 6) அதிகாலை சென்னையிலிருந்து அமெரிக்கா செல்லவிருந்த சரக்கு விமானத்தில் ஏற்ற வைத்திருந்த கொரியர் பார்சல்களைச் சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.

அப்போது சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு அனுப்ப ஏழு கொரியர் பார்சல்கள் வந்திருந்தன. அதனுள் முக்கியமான டாக்குமெண்ட்கள் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அந்தப் பார்சல்களை டெல்லியைச் சேர்ந்த ஒருவர் அனுப்பியிருந்தார்.

போதை மாத்திரைகள் பறிமுதல்

இதனால் சந்தேகம் அடைந்த சுங்கத் துறையினர், அந்தப் பார்சல்களைத் திறந்துப் பார்த்துச் சோதனையிட்டனர். ஏழு பார்சல்களிலும் 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகள் இருந்ததைக் கண்டெடுத்துப் பறிமுதல்செய்தனர்.

அந்த போதை மாத்திரைகளின் பன்னாட்டு மதிப்பு சுமாா் 30 லட்சம் ரூபாயாகும். இதையடுத்து சுங்கத் துறையினர், போதைப்பொருள் கடத்தல் தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

போதை மாத்திரைகள்
போதை மாத்திரைகள்

சென்னை விமான நிலையத்தில் ஒரேநாளில் 62 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 675 கிராம் தங்கம், 10 ஆயிரத்து 100 போதை மாத்திரைகளைச் சுங்கத் துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க: பெண்களை சீரழித்து வீடியோ விற்பனை - கின்னஸ் சாதனை யோகா பயிற்சியாளர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.