மைசூர்(கர்நாடாகா): மைசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவி, தனது நண்பருடன் அப்பகுதியில் உள்ள சாமுண்டி மலையடிவாரத்தில் நடந்து சென்றுள்ளார். அப்போது, மாணவியுடன் வந்த நபரைத் தாக்கிவிட்டு, இளைஞர்கள் சிலர் சேர்ந்து கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக, அம்மாநில காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், கூட்டுப்பாலியல் வன்புணர்வு செய்தவர்கள் மாணவியுடன் வந்த நண்பருக்கு தெரிந்தவர்களா, அல்லது வெளியாட்களா என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவியும், அவரது நண்பரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தனியார் கல்லூரி மாணவி கூட்டுப்பாலியில் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிகழ்வு அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கசந்த பிறந்தநாள் பார்ட்டி- ஆண் நண்பருடன் சண்டை- லிப்ட் கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!