எம்பி சீட் மற்றும் மத்திய அரசு பணிகளை வாங்கி தருவதாகக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த நபரை பிடிக்க பெங்களூரில் சிபிசிஐடி காவல் துறை முகாமிட்டிருந்தனர். தொடர்ந்து அவர்கள் கவர்னர் மற்றும் பிரதமர் அலுவலகங்களில் இருந்து மின்னஞ்சல் அனுப்பவது போன்று மோசடி செய்வது தெரியவந்தது.
இதேபோன்று ஆளுநர் அலுவலக இ-மெயில் போல் போலியாக தகவல் அனுப்பி தமிழ்நாடு முழுவதும் மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து, ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் டிஜிபி, உத்தரவின் பேரிலும் சிபிசிஐடி காவல் துறை வழக்குப்பதிவு செய்து மைசூரைச் சேர்ந்த மகாதேவ் (54), அவரது மகன் அங்கித் (29), ஓசூரை சேர்ந்த ஓம் (34) ஆகிய மூன்று பேரை சிபிசிஐடி காவல் துறை அதிரடியாக கைது செய்தது.
சென்னையை சேர்ந்த ஜான் என்பவரிடம் மட்டும் எம்பி சீட் வாங்கி தருவதாகக் கூறி ரூ.1.50 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். கடந்த ஒருவார காலமாக பெங்களூரு, மைசூர் போன்ற பகுதிகளில் முகாமிட்டு தேடி வந்த நிலையில் சிபிசிஐடி காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தை அமாவாசை: மதுரை டூ ராமேஸ்வரம்.... ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி