ETV Bharat / crime

காஞ்சியில் சகோதரர்கள் வெட்டிக் கொலை:4 பேர் கைது! - காஞ்சியில் சகோதரர்கள் வெட்டி படுகொலை

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் அருகே பல குற்ற வழக்கில் தொடர்புடைய சகோதர்கள் இருவரை வெட்டி படுகொலை செய்த 4 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Four Arrested For Two Brothers Murdered in Kancheepuram

author img

By

Published : Apr 30, 2021, 10:38 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் இமாம் அலி (18), முகமது இஸ்மாயில் (35). இவர்கள் இருவரும் சகோதர்கள். இவர்கள் செங்கல்பட்டு மாவட்டம் தைலாவரம் பகுதியில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று (ஏப். 29) மாடம்பாக்கம் பகுதியில் அம்பேத்கர் தெருவைச் சேர்ந்த ரமேஷ் (33) என்பவர் மாடம்பாக்கம் ஏரி பகுதிக்கு சென்ற போது, சகோதர்களான இமாம் அலி, இஸ்மாயில், அவர்களுடைய நண்பர் இம்ரான் (33) ஆகிய மூவரும் கத்தியைக் காட்டி ரமேஷை மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பிச் சென்ற ரமேஷ், மாடம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ராஜ் (39), முத்து (40), பொன்னையா (26) ஆகியோரை அழைத்து வந்து இமாம் அலி, இஸ்மாயில் ஆகிய இருவரையும் கத்தி, கம்பியால் தாக்கியுள்ளனர்.

Four Arrested For Two Brothers Murdered in Kancheepuram
Four Arrested For Two Brothers Murdered in Kancheepuram

இதில், இமாம் அலியும், இஸ்மாயிலும் தலை, கை, காலில் வெட்டுப்பட்ட நிலையில், படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இம்ரான் மட்டும் தப்பி சென்றுள்ளார். மேலும் உயிரிழந்த இருவரின் உடலையும் ஏரியின் உட்பகுதியில் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற மணிமங்கலம் காவல்துறையினர், இருவரின் உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக குரோம்பேட்டை அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக ரமேஷ், ராஜ் ,முத்து , பொன்னையா ஆகிய நால்வரையும் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பல குற்ற வழக்கில் தொடர்புடைய இருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.