திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா ஊரடங்கின் காரணமாக கள்ளச்சாராயம் விற்பனை அதிகளவில் நடந்து வருவதால் அதனை தடுக்க காவல் துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் உத்தரவின் பேரில் மதுவிலக்கு காவல் துறையினர், திம்மாம்பேட்டை, அளிஞ்சிகுளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அப்பகுதிகளில் கள்ளசாராயம் விற்றுக் கொண்டிருந்த அருண்குமார், உதய சீலன், சேகர் ஆகியோரை கைது செய்து அவர்களிடம் 110 லிட்டர் கள்ளச்சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.
அதனைத்தொடர்ந்து அழிஞ்சிகுளம் பகுதியில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்து அப்பகுதியில் கள்ளத்தனமாக விற்று வந்த தமிழ் என்பவரை கைது செய்து, அவரிடமிருந் 100 வெளிமாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.