காஞ்சிபுரம் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தலைத் தடுக்க மாவட்ட நிர்வாகம், பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதற்கிடையில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியிலிருந்து சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி மூலம் ரேஷன் அரிசி கடத்திக் கொண்டு செல்லப்படுவதாகக் மாவட்ட குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அத்தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற குடிமைப்பொருள் அலுவலர்கள், காஞ்சிபுரம் தாலுகா காவல் துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரிலிருந்து, காஞ்சிபுரம் நோக்கிச் சென்ற லாரி மீது சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து சந்தேகத்தின்பேரில் லாரியை தடுத்து நிறுத்தியபோது, ஓட்டுநர் உடனே தப்பி ஓடியுள்ளார். தொடர்ந்து லாரியை, குடிமைப்பொருள் அலுவலர்கள் சோதனை செய்தபோது, அதில் 15 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே காவல் துறையினர் லாரியுடன், அரிசியைப் பறிமுதல்செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி ஓட்டுநரைத் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 21 டன் ரேஷன் அரிசி பறிமுதல்