ETV Bharat / crime

ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்... போலி மருத்துவர் கைது... - போலி மருத்துவராக கைதானவர்

ஒடுகத்தூர் அருகே ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Fack doctor arrested  Fack doctor  Fack doctor arrested near Odugathur  ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்  போலி மருத்துவர் கைது  போலி மருத்துவர்  போலி மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்  அணைக்கட்டு உதவி மருத்துவர்  வருவாய் மற்றும் மருத்துவ குழு  போலி மருத்துவராக கைதானவர்  சிளீனிக்
ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம்
author img

By

Published : Aug 19, 2022, 10:23 AM IST

வேலூர்: ஒடுகத்தூர் அடுத்த டி.சி.குப்பம் பகுதியை சேர்ந்தவர் நரசிம்மன் (42). இவர் ஹோமியோபதி படித்துவிட்டுவிட்டு அப்பகுதியில் சிறிய கிளினிக் நடத்தி வருகிறார். இவர் அப்பகுதி மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஹோமியோபதி படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்த்துவந்த நரசிம்மன் குறித்து தகவலறிந்த, அணைக்கட்டு உதவி மருத்துவர் ஜெயந்த், வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், நேற்று (ஆகஸ்ட் 18) காவல் ஆய்வாளர் உலகநாதன், வருவாய் மற்றும் மருத்துவ குழுவினருடன் நேரில் சென்று, நரசிம்மனின் கிளினிக்கை ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது நரசிம்மன் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்து. இதனையடுத்து நரசிம்மன் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். நரசிம்மன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அரும்பாக்கம் வங்கி கொள்ளை .. காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.