ஈரோடு: மலையம்பாளையத்தை சேர்ந்தவர் நந்தகோபால், ராஜேஸ்வரி தம்பதி். இவர்களுக்கு திருமணம் ஆகி 9 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். நந்தகோபால் இறைச்சி கடை நடத்தி வருகிறார்.
இவரது மனைவி ராஜேஸ்வரிக்கும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோ என்ற திருமணம் ஆகாத இளைஞருக்கும் கடந்த 5 ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்து வந்துள்ளது. மனைவியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த நந்தகோபால், வேலைக்கு செல்வது போல சென்று விட்டு மறைந்து இருந்து காத்து இருந்து பார்த்து உள்ளார்.
கணவர் வேலைக்கு தான் சென்று விட்டார் என்று நம்பிய ராஜேஸ்வரி தனது காதலன் இளங்கோவை சாவிடிபாளையம் பகுதியில் உள்ள இடத்தில் சந்தித்து பேசி கொண்டிருந்துள்ளார். மனைவி ராஜேஸ்வரியை பின் தொடர்ந்து சென்ற நந்தகோபால், காதலன் இளங்கோவுடன் கையும் களவுமாக பிடித்து சண்டையிட்டு கடும் வாக்கு வாதம் செய்ததுடன், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் இருவரையும் தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த ராஜேஸ்வரி, இளங்கோ கூச்சலிட அருகே இருந்தவர்கள் ஓடி வந்ததும் அங்கிருந்து நந்தகோபால் தலைமறைவானார். இந்த சம்பவத்தில் காயமடைந்த ராஜேஸ்வரி, இளங்கோ ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ராஜேஸ்வரி, இளங்கோ புகார் எதுவும் வேண்டாம் என்று கூறிய நிலையில், மனம் கேட்காமல் தனது மனைவியை பார்க்க அரசு தலைமை மருத்துவமனைக்கு நந்தகோபால் சென்றுள்ளார்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது கூட ராஜேஸ்வரியும், இளங்கோவும் ஒன்றாக பேசி கொண்டு இருப்பதை கண்டு மேலும் ஆத்திரம் அடைந்த நந்தகோபால் மருத்துவமனை வார்டிலேயே தான் வைத்திருந்த கறி வெட்டும் கத்தியால் இளங்கோவை தாக்கியுள்ளார். இதைக்கண்டு வார்டில் இருந்த பிற நோயாளிகள் அலறி அடித்து வெளியில் ஓடியுள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இளங்கோவும், ராஜேஸ்வரியும் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் ராஜேஸ்வரியின் கணவரான நந்தகோபாலை கைது செய்தனர்.
திருமணமாகி மூன்று குழந்தைகள் இருந்தும் திருமணத்தை மீறிய உறவால் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்ற கத்தி குத்து சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: 35 துண்டுகளான லிவிங் டூகெதர் காதலி; அமெரிக்கன் க்ரைம் தொடர் போல் திட்டம் தீட்டிய காதலன்