மக்களுக்கு குடியிருப்புகள் வழங்குவது என்ற பெயரில் ரூ 2.5 கோடியை மோசடி செய்ததாக டெல்லி காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (ஈ.ஓ.டபிள்யூ) ஒருவரை கைது செய்துள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டவர் பெயர் புனியா என்றும், இவர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈ.ஓ.டபிள்யூ திட்ட இணை ஆணையர் ஓ.பி மிஸ்ரா அறிக்கைப்படி, “குற்றஞ்சாட்டப்பட்ட இவர் ஆயுதப்படையின் முன்னாள் சேவையாளர். வேலையை விட்டு வெளியேறிய பின்னர், துவாரகா பிரிவு -23 பகுதியில், பாதுகாப்பு தனிநபர் நல வீட்டுவசதி அமைப்பு என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளார். இதன் கீழ், 2016 - 17ஆம் ஆண்டுகளில் பிளாட் வாங்கிக் கொடுப்பதாக வாக்குறுதியளித்துவிட்டு, மக்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு தப்பியுள்ளார்.
இதுகுறித்து 2017ஆம் ஆண்டில், துவாரகாவின் மீது பிரிவு -23 காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர், 2019ஆம் ஆண்டில், இந்த வழக்கு டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்களைப் பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறை குழுவினரால் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் ஏசிபி கபில் பராஷரின் மேற்பார்வையில், சப் இன்ஸ்பெக்டர் அனுராக் குழுவினர், தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் விசாரணையின் உதவியுடன் பிப்ரவரி 23 அன்று தமிழ்நாட்டிலிருந்த இவரை கைது செய்தனர். வரும் பிப்ரவரி 27ஆம் தேதிவரை இவர், காவல் துறை விசாரணையில் எடுக்கப்பட்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆன்லைன் காதல்- காதலி வீட்டில் காதலன் தற்கொலை!