ETV Bharat / crime

தர்மபுரி அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவர் உள்ளிட்ட 11 பேர் கைது! - தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலக்கோடு அருகே நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவர் மற்றும் துப்பாக்கி வாங்கிய நபர்கள் உள்பட 11 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

நாட்டு துப்பாக்கி தயாரித்து விற்றவர் கைது

author img

By

Published : Jul 21, 2021, 11:02 PM IST

தர்மபுரி: பாலக்கோடு அடுத்த மாரண்டஹள்ளி, பஞ்சப்பள்ளி பகுதிகளில் சட்ட விரோதமாக நாட்டு துப்பாக்கி நடமாட்டம் உள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் வந்தது.

இதனைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் கலைசெல்வன், அனுமதியின்றி துப்பாக்கி வைத்திருக்கும் நபர்களைக் கண்டறிந்து கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி மாரண்டஹள்ளி நான்கு ரோட்டில் காவல்துறையினர் வாகன தணிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அவர் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக நாட்டு துப்பாக்கி கொண்டு சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர் துப்பாக்கியை எங்கே வாங்கினார் என காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த கடூர் கிராமத்தைச் சேர்ந்த சங்கர்(33), அவரது தந்தை எல்லப்பன்(69) ஆகிய இருவரும் அவர்களது வீட்டில் நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து மாரண்டஹள்ளி காவல் ஆய்வாளர் ஜாபர் உசேன், துணை ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் காவலர்கள் யார் யாருக்கு நாட்டு துப்பாக்கி விற்பனை நடந்துள்ளது என விசாரணை செய்தனர்.

இதில், மாரண்டஹள்ளியை சேர்ந்த ரஜினி(41), சீரியம்பட்டியைச் சேர்ந்த சக்திவேல்(40), கிருஷ்ணன்(52), கரகூரைச் சேர்ந்த முல்லேசன்(26), மல்லப்பன்(50), அன்பு(32), சொக்கன்(45) உள்ளிட்ட 11 பேர் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி வைத்திருந்ததாக காவல்துறையினர் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து 11 நாட்டு துப்பாக்கிகளையும் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்டவர்களை காவல்துறையினர் அரூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: டேட்டிங் ஆப் மோசடி - ரூ.11 லட்சத்தைப் பறிகொடுத்த 77 வயது முதியவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.