மகாராஷ்டிரா தலைநகர் மும்பை டோங்கிரி பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்வதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதியில் காவல் துறையினர் நடத்திய சோதனையில், போதைப் பொருள விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக ஒருவரை கைது செய்த காவல்துறையினர் , அவரிடம் இருந்து மெபெட்ரோன் உள்ளிட்ட 25 கிலோ எடைகொண்ட போதைப்பொருளை பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள்களின் மதிப்பு சுமார் ரூ. 12.5 கோடியாகும். மேலும் அவரிடமிருந்து ரூ .5 லட்சம் ரொக்க பணத்தையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க...திருமண விழாவில் சாப்பிட்ட 70-க்கும் மேற்பட்டோருக்கு உடல்நலம் பாதிப்பு!