பிகார் முசாபர்பூர்-தர்பங்கா தேசிய நெடுஞ்சாலை வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக வருவாய்ப் புலனாய்வு முகமைக்குத் தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று (பிப். 18) முசாபர்பூர் மைதி சுங்கச்சாவடி அருகே வந்த ஒரு டிரக்கை வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் தடுத்து சோதனையிட்டனர்.
சோதனையில், டிரக்கிலிருந்து 1 கோடியே 58 லட்சம் மதிப்பிலான ஆயிரத்து 58 கிலோ கஞ்சாவைப் பறிமுதல்செய்தனர். மேலும் இரண்டு ஓட்டுநர்களைக் கைதுசெய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கஞ்சாவை திரிபுரா உதய்பூரிலிருந்து கடத்தி, பிகாரின் வைஷாலிக்கு கொண்டுசெல்வதாகத் தெரிவித்தனர். இது குறித்து வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் கூறுகையில், “வாகனம், கஞ்சாவைப் பறிமுதல்செய்தும், இருவரைக் கைதுசெய்தும் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.
இதையும் படிங்க...பெண் மருத்துவரை காதலித்து ஏமாற்றிய இளைஞர் கைது!