குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த குமரன், திமுகவில் மாநில கொள்கை பரப்பு துணைச் செயலாளராக இருந்துவந்தார். இதனிடையே 2019இல் இவர் கட்சி விதியை மீறியதாக, கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
இச்சூழலில், இவர் தொடர்ந்து அதிமுக அமைச்சர்களையும், அதிமுக அரசு குறித்தும் அவதூறாக சமூக வலைதளங்களில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு, மாநில மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் குறித்து குமரன் அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசிய காணொலி சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.
இதனையடுத்து குடியாத்தம் அதிமுக நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில், குமரனை கைதுசெய்து, குடியாத்தம் நகர காவல் துறையினர், அவர் மீது இரண்டு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.