சென்னை: Diamond smuggling: ஆப்ரிக்க நாட்டிலிருந்து பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள், விமானத்தில் சென்னைக்குக் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையான டி.ஆர்.ஐ-க்கு (Directorate of Revenue Intelligence) ரகசியத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து டி.ஆர்.ஐ அலுவலர்கள் சென்னை விமானநிலைய சுங்கத்துறையினருக்குத் தகவல் கொடுத்தனா். அத்தோடு டிஆா்ஐ மற்றும் சுங்கத்துறையினா் இணைந்த தனிப்படையினா், சென்னை சா்வதேச விமானப் பயணிகளை, குறிப்பாக ஆப்ரிக்கா நாடுகளிலிருந்து வரும் பயணிகளைத் தீவிரமாகக் கண்காணித்து சோதனையிட்டனா்.
717.95 கேரட் வைரக்கற்கள் பறிமுதல்:
இந்நிலையில்,துபாயிலிருந்து வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானப் பயணிகளைக் கண்காணித்தபோது, அதில் மும்பையைச் சோ்ந்த ஒரு 35 வயது ஆண் பயணி, ஆப்ரிக்க நாடான காங்கோவிலிருந்து துபாய் வழியாகச் சென்னை வந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணியைத் தீவிரச் சோதனைக்குட்படுத்தினா்.
அப்போது அவருடைய உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 3 பாலிதீன் கவா்களை எடுத்துப் பிரித்து பாா்த்தனா். அதனுள் பட்டை தீட்டப்படாத வைரக்கற்கள் 717.95 கேரட் இருந்ததைக் கண்டுபிடித்தனா். அதன் சா்வதேச மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும்.
இதையடுத்து வைரக்கற்களைப் பறிமுதல் செய்த அலுவலர்கள் மும்பைப் பயணியைக் கைது செய்து மேலும் விசாரணை நடத்துகின்றனா்.
பட்டை தீட்டப்படாத இந்த வைரக்கற்கள்,ஆப்ரிக்க நாடுகளில் அதிக அளவில் கிடைக்கக்கூடியது. இதைக் கடத்தி வந்து பட்டை தீட்டி பாலீஸ் செய்து, வைரக்கற்களுக்கான வடிவம் கொடுத்தபின்பு, இதன் மதிப்பு கோடிக்கணக்கில் உயா்ந்து விடும் என்று கூறப்படுகிறது.