ETV Bharat / crime

லாரிகள் மோதல்...ஓட்டுனர் பலி - lorry accident

கோவையில் முட்டை ஏற்றிச் சென்ற மினிலாரியும், கண்டெய்னர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் பலியானார்.

லாரி விபத்து
லாரி விபத்து
author img

By

Published : Nov 10, 2022, 9:48 AM IST

கோவை: கோவை மாவட்டம் சூலூர் அடுத்த எல்.அண்ட்.டி சாலையில் முட்டை லோடு ஏற்றிக்கொண்டு ஈச்சர் வாகனம் சென்று கொண்டிருந்தது. பட்டணம் பைபாஸ் சாலை அருகே சென்ற போது, எதிர்திசையில் வந்த கண்டெய்னர் லாரி எதிர்பாராத விதமாக முட்டை ஏற்றி சென்ற வாகனம் மீது மோதியது.

இதில் அந்த மினிலாரி அப்பளம் போல் நொறுங்கியது. ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அங்கு சென்ற போலீசார், கண்டெய்னர் லாரி ஓட்டுநர் உள்ளிட்டோரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: இங்கிலாந்து அரசர் சார்லஸ் மீது முட்டை வீச முயற்சி...கல்லூரி மாணவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.