ETV Bharat / crime

சென்னையில் குட்கா கடத்தல்: இளைஞர் கைது!

சென்னை: சரக்கு வாகனத்தில் குட்கா கடத்தி வந்த இளைஞரை, பல மணி நேர தேடுதலுக்கு பிறகு காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னையில் குட்கா கடத்தல்: இளைஞர் கைது!
சென்னையில் குட்கா கடத்தல்: இளைஞர் கைது!
author img

By

Published : Jan 26, 2021, 2:49 PM IST

சென்னை பீர்க்கன்கரணை காவல் நிலைய ரோந்து வாகன காவல் துறையினர், கடந்த சனிக்கிழமை (ஜன. 23) காலை 05.30 மணியளவில் முடிச்சூர் மெயின் ரோடு, மதனபுரம் சர்வீஸ் சாலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக வந்த TN05 BE4965 என்ற பதிவெண் கொண்ட டாடா ஏஸ் சரக்கு வாகனத்தில் வந்த நபர்கள், காவல் துறையினரை கண்டதும் சரக்கு வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடினர். காவல் துறையினர் சரக்கு வாகனத்தை சோதனை செய்து பார்த்தபோது ஆயிரத்து 40 கிலோ எடை கொண்ட தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை உள்ளிட்ட பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

மேலும், பீர்க்கன்கரணை காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி தேடுதலில் ஈடுபட்டு மேற்படி குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வந்த சரக்கு வாகனத்தின் ஓட்டுநர் உத்திரமேரூரைச் சேர்ந்த காசி(22), என்பவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட காசி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இதையும் படிங்க...பாப்பம்மாள் போராட்டங்களில் முன் நிற்பவர்: மு.க. ஸ்டாலின் வாழ்த்து

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.