சென்னை மாங்காடு காவல் துறையினர் பரணி புத்தூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒருவர் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். சந்தேகமடைந்து அந்த நபரை பிடித்து விசாரணை செய்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்தபோது, திருமண மண்டபம் ஒன்றில் நகை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர், பொழிச்சலூரைச் சேர்ந்த பன்னீர்தாஸ் (என்ற) பன்னீர்செல்வம்(23), என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில் பாக்கெட்டில் 7 1/2 பவுன் நகைகள், இரண்டு செல்போன்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
எந்த திருமண மண்டபத்தில் திருடினாய் என்று கேட்டபோது, அந்த திருமண மண்டபத்தை காண்பித்தார். பின்னர் காவல் துறையினர் அவரை அங்கு அழைத்து சென்றனர். திருமண மண்டபத்தின் மேல் அறையில் உள்ள பூட்டு உடைக்கப்பட்டு நகை, செல்போன்கள் கொள்ளை அடிக்கப்பட்டு இருந்தது உரிமையாளரான பம்மலைச் சேர்ந்த விஜயகுமாருக்கு அப்போதுதான் தெரியவந்தது. திருமண மண்டபத்தின் அறையில் நகை பைகளை வைத்து பூட்டிவிட்டு கீழே சென்று திருமண வேலைகளை பார்த்துக் கொண்டிருந்த போது, பன்னீர்தாஸ் மேலே சென்று நகை திருடியது தெரியவந்தது.
மேலும் விசாரணையில் பன்னீர்தாசின் தந்தைக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். அவர்கள் குடும்பத்தில் இவரோடு சேர்த்து 11 பிள்ளைகள் உள்ளதால், போதிய வருமானம் இல்லாமல் பட்டப்படிப்பு படித்து முடித்து சரியான வேலை இல்லாததால், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தவறான பழக்கம் ஏதும் இல்லாததால் இவர் திருடிய நகைகளை அடகு வைத்து வரும் பணத்தில் வீட்டிற்கு செலவுக்கு சிறிது கொடுத்து விட்டு மற்ற பணத்தை ஜாலியாக செலவு செய்ய முடிவு செய்துள்ளார். ஆனால் திருட்டில் ஈடுபட்ட இரண்டு மணி நேரத்தில் பன்னீர்தாஸ் கைது செய்யப்பட்டார். மேலும், திருடிய நகைகளை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு சிறுநீர் கழிக்கும்போது காவல் துறையினரிடம் சிக்கிய சம்பவம் பன்னீர்தாசை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. நகை திருடு போனது அதன் உரிமையாளருக்கு தெரியும் முன்பு கொள்ளையனை கைது செய்த காவல் துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டி தெரிவித்தனர்.
ஐபோனை காணோம்... ரூ. 25ஆயிரம் பணத்தை திருடிச் சென்ற நபர்!
இதே போன்று வானகரம் அடுத்த மேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அலி அக்பர் என்பவரது டீக்கடையில், காரம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயராஜ் என்பவர் டீ குடிப்பது வழக்கம். அதன்படி, இன்று (ஜன. 29) கடைக்கு வந்த ஜெயராஜ், மூன்று தினங்களுக்கு முன்பு கடையில் டீ குடித்து விட்டு விலை உயர்ந்த ஐபோனை தொலைத்துவிட்டதாக அலி அக்பரிடம் தகராறு செய்தார்.
இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த ஜெயராஜ் கடையின் கல்லாப் பெட்டியில் இருந்த ரூ. 25 ஆயிரம் பணம், சிகரெட் பாக்கெட்டுகள், கண்ணாடி பாட்டில்களை கீழே தள்ளிவிட்டு சென்றுவிட்டதாக போரூர் காவல் நிலையத்தில் அலி அக்பர் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போரூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க...கோவையில் யானை தாக்கி பெயிண்டர் உயிரிழப்பு!