ETV Bharat / crime

கபில்தேவிடம் இருந்து காப்பாற்றும்படி கூறிய பெண் தற்கொலை - தலைமைக் காவலர் கைது! - women suicide

சென்னை பட்டினப்பாக்கத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், தற்கொலைக்கு தூண்டியதாக சந்தேகித்து தலைமைக் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Suicide, இளம்பெண் தற்கொலை, தற்கொலை செய்திகள், head constable arrested, women suicide, vigneshwari suicide
பெண் தற்கொலை
author img

By

Published : Oct 25, 2021, 10:30 PM IST

Updated : Oct 26, 2021, 10:04 AM IST

சென்னை: பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ்வரி(27). இவருக்கு திருமணமாகி கபில்தேவ் என்ற கணவரும், கவிஸ்ரீ(11) சாய்விகாஸ்(5) என இரு பிள்ளைகள் உள்ளனர்.

முன்னாள் தடகள வீராங்கனையான விக்னேஷ்வரிக்கும் அவரது கணவருக்கும் கடந்த ஓராண்டு முன்பு கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தது வாழ்ந்து வந்தனர். குடும்பநல நீதிமன்றத்தில் இவர்களது விவாகரத்து தொடர்பான வழக்கு நடைப்பெற்று வருகிறது.

இதனையடுத்து விக்னேஷ்வரிக்கும் நீலாங்கரை காவல் நிலையத்தில் குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் முகிலன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இருவரும் ஒரே வீட்டில் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றிரவு (அக்டோபர் 24) விக்னேஷ்வரி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உடனே முகிலன் 108 அவசர ஊர்திக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு வந்த அவசர ஊர்தி ஊழியர் விக்னேஷ்வரியை பரிசோதித்து அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

Suicide, இளம்பெண் தற்கொலை, தற்கொலை செய்திகள், head constable arrested, women suicide, vigneshwari suicide
தற்கொலை தீர்வல்ல

பின்னர், காவலர் முகிலன் இது குறித்து பட்டினப்பாக்கம் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில், அங்கு சென்ற காவல் துறையினர் விக்னேஷ்வரி உடலைக் கைபற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் விக்னேஷ்வரி இறந்த தகவல் கேட்டு அங்கு வந்த உறவினர்கள், அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், தற்கொலைக்கு காரணமான காவலர் முகிலனை கைது செய்ய வலியுறுத்தினர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தலைமை காவலர் முகிலனை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று விக்னேஷ்வரி முகிலனிடம் தனது கணவர் கபில்தேவ் வந்து அடிக்கடி தகராறு செய்வதால், அவரை தட்டி கேட்க வேண்டும் என கேட்டுள்ளார்.

அதற்கு முகிலன் அடுத்த மாதம் விவாகரத்து வழக்கு முடிந்து விடும், பின்னர் இது குறித்து பார்த்து கொள்ளலாம் என கூறியதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஸ்வரி முகிலன் கழிவறைக்கு சென்ற நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக காவலர் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: பெண்ணிடம் 4 சவரன் நகை பறிப்பு - பைக்கில் வந்த கொள்ளையர்களின் அட்டகாசம்

Last Updated : Oct 26, 2021, 10:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.