ETV Bharat / crime

மதுரை அருகே சங்கிலி பறிக்கும் திருடன் - வெளியான சிசிடிவி காட்சி - வெளியான சிசிடிவி காட்சி

மதுரை: நடந்து சென்ற பெண்ணின் கழுத்திலிருந்த 4 சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் செல்லும் நபரின் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

snatching_t
snatching_t
author img

By

Published : Feb 20, 2021, 12:10 PM IST

மதுரை அருகே திருநகர் வெற்றி விநாயகர் கோயில் பகுதியில் வசித்துவருபவர் மல்லிகா (62). இவர் மதுரைக்குச் சென்றுவிட்டு தனது வீட்டிற்குச் சென்றுகொண்டிருந்தார். அப்போது திருநகர் இரண்டாவது பேருந்து நிலையம் அருகே மல்லிகா தனியாக வருவதை நோட்டமிட்ட ஒருவர் அவரை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்தார்‌.

இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த நபர், மல்லிகாவின் கழுத்தில் இருந்த நான்கு சவரன் தங்கச் சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துச் சென்றார். அதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து திருநகர் காவல் நிலையத்தில் மல்லிகா புகாரளித்தார்.

புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குறித்து சிசிடிவி காட்சியைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலை.யில் மத்திய அரசு இட ஒதுக்கீட்டை பின்பற்றி மாணவர் சேர்க்கை நடத்த உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.