ETV Bharat / crime

சிசிடிவி காட்சி: தொழில் போட்டி தகராறு - ஒருவரை தாக்கிய கும்பல் - தொழில் போட்டி தகராறில் ஒருவர் மீது 10 பேர் தாக்குதல்

துணிக்கடையில் வாடிக்கையாளரைப் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஊழியரை 10 பேர் கொண்ட கும்பல் சரமாரியாகத் தாக்கிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்
author img

By

Published : Jan 31, 2022, 7:19 PM IST

சென்னை: வண்ணாரப்பேட்டை எம்.சி. சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் இயங்கிவருகின்றன. இங்கு வியாபார போட்டி அதிகமாக இருப்பதினால் வாடிக்கையாளர்களை அழைத்துச் செல்வதற்காக, இளைஞர்கள் பணியமர்த்தப்பட்டு அவர்களுக்கு நாளொன்றுக்கு 500 ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுவருகிறது.

இந்நிலையில் வண்ணாரப்பேட்டை ஜீன்ஸ் பார்க் கடைக்கு வரக்கூடிய வாடிக்கையாளர்களை, வலுக்கட்டாயமாக அருகே இருக்கும் கடைகளுக்கு இளைஞர்கள் அழைத்துச் செல்வதாக ஜீன்ஸ் பார்க் கடை ஊழியர் ஆசிப், உரிமையாளர் தமீம் அன்சாரியிடம் தெரிவித்துள்ளார். இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் இருந்துள்ளது.

சிசிடிவி காட்சி

இதே நிலை தொடர்ந்ததால் இது குறித்து இளைஞர்கள் மீது ஜீன்ஸ் பார்க் உரிமையாளர் தமீம் அன்சாரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில் வண்ணாரப்பேட்டை காவல் துறையினர், ரஞ்சித், திலக், பிரேம், ராஜா ஆகியோரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து எச்சரித்து எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பிவைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரத்திலிருந்த அந்த இளைஞர்கள் நேற்று (ஜனவரி 30) கடையின் உள்ளே 10-க்கும் மேற்பட்டோருடன் புகுந்து ஊழியர் ஆசிப்பை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ஆசிப் மயக்கமடைந்தார்.

பின்னர் கடையின் உரிமையாளர் தமீம் அன்சாரி, மயக்கமடைந்த ஆசிப்பை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சாலை விபத்தில் காயமடைந்தவரை காப்பாற்றிய அமைந்தகரை காவலர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.