ETV Bharat / crime

பிரதமர், ஆளுநர் பெயரில் மோசடி செய்த கும்பல்: சிபிசிஐடி தொடர் விசாரணை

author img

By

Published : Feb 19, 2021, 11:08 AM IST

சென்னை: பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி ரூ.100 கோடி மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் சிபிசிஐடி காவல்துறை பெங்களூரு அழைத்துச் சென்றது.

theft
theft

பெங்களூருவைச் சேர்ந்த மகாதேவய்யா, அவரது மகன் அங்கித், ஓசூரைச் சேர்ந்த ஓம் மூவரும், பிரதமர், ஆளுநர் பெயரை பயன்படுத்தி தொழிலதிபர், திரைப்பட தயாரிப்பாளரிடம் எம்பி சீட் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி வரை மோசடி செய்துள்ளனர். பின்பு ஆளுநர், மற்றும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து மின்னஞ்சல் அனுப்புவது போன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோன்று பெங்களூருவில் பலரிடம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவர் சீட்டு வாங்கித் தருவதாகவும், மத்திய அரசிடம் டெண்டர் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.100 கோடி வரை மோசடி செய்துள்ளனர். மோசடியில் ஈடுபட்டு வந்த மூவரையும் சிபிசிஐடி தனிப்படை காவல்துறை மைசூரில் கைதுசெய்தது. இதனைத்தொடர்ந்து, 3 பேரையும் 6 நாள் காவல் எடுத்து சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றது.

விசாரணையில், பிரதமர் அலுவலகத்தில் வேலை பார்த்து ஓய்வுபெற்ற இரண்டு ஐஏஎஸ் அலுவலர்கள் இதற்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. அவர்களுக்கு மகாதேவய்யா தொடர்பான வங்கி கணக்கில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதை சிபிசிஐடி காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.

அதன் தொடர்ச்சியாக நேற்று (பிப்.18) மூன்று பேரையும் பெங்களூரு, மைசூர், டெல்லி ஆகிய இடங்களுக்கு அழைத்துச் சென்று சிபிசிஐடி காவல்துறை விசாரணை நடத்தியது.

இந்த மோசடி கும்பல் பெங்களூருவில் அலுவலகம் அமைத்து, பல கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மோசடி குறித்து பாதிக்கப்பட்டவர்கள் சிலர் மட்டுமே புகாரளித்துள்ளதாக சிபிசிஐடி காவல்துறை தெரிவித்துள்ளது. பல முக்கிய பிரமுகர்கள் அரசியல்வாதிகள் கருப்பு பணத்தை பயன்படுத்தி பதவி உயர்வு பெறவும் மத்திய அரசு அங்கீகாரம் பெற முயற்சித்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

கருப்பு பணத்தை கொடுத்து பணத்தை ஏமாந்தவர்கள் புகார் அளிக்காமல் இருந்தாலும் அதுதொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது.

குறிப்பாக மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை கடிதம் அனுப்பி தகவல் ஒன்றை கேட்டதாக சிபிஐக்கு போலி கடிதம் அனுப்பிய விவகாரத்தின் சிபிஐயும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அலுவலர்கள் தொடர்பு குறித்தும், அதற்கான கூடுதல் ஆவணங்களை சேகரித்து தொடர்புடைய ஐஏஎஸ் அலுவலர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

இதையும் படிங்க: குழந்தை இல்லாத விரக்தியில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.