தாம்பரம் பீர்க்கண்காரனையை சேர்ந்த வரதன், நிஷா தம்பதியின் 9 வயது மகன் கவுதம், அதேப்பகுதியில் உள்ள பூங்காவில் விளையாடச் சென்றுள்ளான். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்து சிறுவன் கவுதம் உயிரிழந்தான்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் ஏராளமானோர், மெத்தனப்போக்குடன் செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுருத்தி, முடிச்சூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் தாம்பரம் முடிச்சூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கபட்டது. பின்னர் காவல்துறையினர் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து கலைந்து சென்றனர்.
![பூங்காவில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-05-boykilledbyelectricshock-visual-script-7208368_02032021184803_0203f_1614691083_266.jpg)
இதையும் படிங்க: வாகன விபத்தில் மகன் கண் முன்னே தாய் மரணம்!