ETV Bharat / crime

மலர் சந்தையில் வெடிகுண்டு - செயலிழக்கச் செய்த வெடிகுண்டு நிபுணர்கள் - East Delhi Ghazipur area flower market

கிழக்கு டெல்லியின் காஸிபூர் மலர் சந்தையில் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை டெல்லி வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர்.

FIR launched in Delhi flower market bomb scare
மலர் சந்தையில் வெடிகுண்டு
author img

By

Published : Jan 14, 2022, 5:32 PM IST

டெல்லி: கிழக்கு டெல்லியில் உள்ள காஸிபூர் மலர் சந்தையில் பல கடைகள் உள்ளன. இன்று(ஜன.14) அங்கு ஒரு மலர் கடைக்கு அருகில் பையில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் வெடிகுண்டு இருந்துள்ளது.

இதனைக் கண்ட மக்கள் உடனடியாக காவல்துறையினருக்குத் தகவலளித்துள்ளனர். உடனடியாக காவல் துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பின்னர் அந்த பையில் வெடிகுண்டு இருப்பதை உறுதிசெய்த வெடிகுண்டு நிபுணர்கள், ஆளில்லா இடத்திற்கு கொண்டு சென்று, குழி தேண்டி அதில் போட்டுள்ளனர். சுற்றி உள்ளவர்களின் காதை துளைக்கும் படி அந்த வெடிகுண்டு வெடித்துச் சிதறியது.

மலர் சந்தையில் வெடிகுண்டு

இதுகுறித்து அங்கிருந்த வாடிக்கையாளர் கூறுகையில், “காலை 10.30 மணியளவில் காஸிபூர் மலர் சந்தையில் நிறுத்தப்பட்டிருந்த ஸ்கூட்டியில் இந்தப் பை கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு இங்கு வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை செயலிழக்கச் செய்தனர்” என்றார்.

தற்போது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். நல்வாய்ப்பாக எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

இதையும் படிங்க: ஊரார் முன்னிலையில் அவமானப்படுத்திய அரசியல் பிரமுகர் - பழிக்குப் பழிவாங்கிய காவலர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.