சென்னை: ஆவடியை அடுத்த திருநின்றவூர் பிரகாஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சேஷாத்திரி (49). இவர் கடந்த 10 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் தொழில் செய்துவந்துள்ளார். கரோனா ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழிலில் ஏற்பட்ட இழப்பு காரணமாக கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்துவந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இரவு மதுபோதையில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்படி கையில் சுத்தியலுடன் திருநின்றவூர் பிரகாஷ் நகர் முதல் திருநின்றவூர் வரை சி.டி.ஹெச். சாலையில் உள்ள எஸ்பிஐ, கனரா, ஆக்சிஸ் உள்ளிட்ட ஆறு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்துள்ளார்.
ஆனால் ஏடிஎம் இயந்திரங்களை உடைக்கத் தெரியாததால் கையில் இருந்த சுத்தியலுடன் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். சரணடைந்த சேஷாத்திரி திட்டமிட்டுச் செய்தாரா, மனநலம் பாதிக்கப்பட்டவரா எனக் காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.
சென்னை அருகே அடுத்தடுத்து ஆறு ஏடிஎம் இயந்திரங்களை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நீ வேணா சண்டைக்கு வா... போதையில் ஆடையின்றி தகராறில் ஈடுபட்ட காவலர்