ETV Bharat / crime

ஓபிஎஸ் ஊரில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த இளைஞன்; கண்டுகொள்ளாத காவல்துறை - அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டி

கஞ்சா போதையில் இளைஞர் ஒருவர் கையில் அரிவாளுடன் பொதுமக்களை மிரட்டிய காணொலி இணையதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது.

கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றி திரிந்த இளைஞன்; கண்டுகொள்ளாத காவல்துறை

author img

By

Published : Oct 6, 2022, 10:31 PM IST

தேனி: பெரியகுளம் கீழவடகரை ஊராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர், கண்ணன் என்ற கண்ணதாசன் (28). நாள்தோறும் கஞ்சா போதையில் அப்பகுதி பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாலைகளில் செல்பவர்களிடம் கையில் அரிவாளுடன் மிரட்டி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

கண்ணதாசன் கஞ்சா போதை தலைக்கேறியதும் அரிவாளை கையில் எடுத்துக்கொண்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களையும், கடை உரிமையாளர்களையும் அரிவாளை காட்டி மிரட்டி வருகின்றார். இதனால் அச்சமடைந்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரையிலும் காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தொடர்ந்து கண்ணதாசன், அந்தப்பகுதியில் அடிக்கடி அரிவாளுடன் நிதானமற்ற நிலையில் போதையில் ரவுடி போன்று வலம் வருவது பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதால், இதுபோன்று கஞ்சா போதைக்கு அடிமையான நபர்கள் பொதுஇடங்களில் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் நடந்துகொள்வது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

பெரியகுளத்தில் கஞ்சா போதையில் அரிவாளுடன் சுற்றி திரிந்த இளைஞன்; கண்டுகொள்ளாத காவல்துறை

கண்ணதாசன் என்பவரால் அசம்பாவிதம் எதுவும் நடப்பதற்கு முன்பு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களைக்காக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாலிடெக்னிக் கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளர்கள் நீக்கம் - திமுகவுக்கு ஓபிஎஸ் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.