ஹைதராபாத்: இளைஞர் ஒருவர் செகந்தராபாத்தில் மொண்டா மார்க்கெட் அருகே சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது இந்த வாரத்தில் அப்பகுதியில் நிகழ்ந்திருக்கும் மற்றொரு சம்பவம் ஆகும்.
இவர் ஒரு வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்துள்ளார். இவர் வீட்டின் உரிமையாளரின் மகள் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர் இந்த வீட்டின் உரிமையாளர் குடும்பத்தினரிடம் நல்லவர் போல் பழகி வந்துள்ளார். இதன் மூலம் அந்தக் குடும்பத்தின் நற்பெயரையும் இவர் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இந்த மாதம் 1ஆம் தேதியன்று வீட்டு உரிமையாளரின் மகள் திடீரென்று காணாமல் போயுள்ளார். மறுபக்கம் அந்த இளைஞரும் வீட்டில் காணவில்லை. இதனையடுத்து, வீட்டின் உரிமையாளர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து காவல் துறையினர் காணாமல் போன சிறுமியைத் தேடத்தொடங்கினர். இந்நிலையில், காணாமல் போன சிறுமியே காவல் துறையை முறையிட்டு தான் அந்த இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகப் புகார் அளித்தார். இதையடுத்து தற்போது அந்த குற்றஞ்சாட்டப்பட்ட இளைஞர் மீது காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை வலை வீசித் தேடி வருகின்றனர்.