ETV Bharat / crime

கடலில் மிதந்து வந்த உயர் ரக கஞ்சா பொட்டலங்கள் -  காவல்துறையினர் விசாரணை! - nagapattinam news

நாகப்பட்டிணம் மாவட்டம் காமேஸ்வரம் கடற்கரையில் 6 கிலோ கஞ்சாப் பொட்டலங்கள் கண்டெடுக்கப்பட்டது குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

நாகப்பட்டிணம்
கடலில் மிதந்து வந்த உயர் ரக கஞ்சா பொட்டலங்கள்
author img

By

Published : Mar 13, 2021, 3:32 PM IST

நாகப்பட்டிணம்: காமேஸ்வரம் கடற்கரையில் தவமணி என்பவர் தனக்குச் சொந்தமான பைபர் படகில், தான் உட்பட மூவருடன் மீன் பிடிப்பதற்காகச் சென்றுள்ளனர். மீன் பிடித்துவிட்டு கரைத் திரும்பிய போது, இரண்டு கடல் மைல் தொலைவில் மூட்டைகள் மிதந்து வருவதை கண்டுள்ளனர். இதுகுறித்து சந்தேகமடைந்த அவர்கள், அம்மூட்டைகளை மீட்டு அதைத் திறந்து பார்த்துள்ளனர்.

கடலில் மிதந்து வந்த உயர் ரக கஞ்சா பொட்டலங்கள்-போலீசார் கைப்பற்றி விசாரணை

அப்போது, அது கஞ்சா பொட்டலங்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கண்டெடுக்கப்பட்ட கஞ்சாப் பொட்டலங்கள் உடன் கரை திரும்பிய மீனவர்கள், இதுகுறித்து கீழையூர் கடலோரக் காவல் குழும காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அவ்விடத்திற்கு வந்த காவல் துறையினரிடம், மீனவர்கள் 6 கிலோ கஞ்சாப் பொட்டலங்களை ஒப்படைத்தனர்.

நாகை கடலோர காவல் குழும காவல் துறையினரும், கியூ பிரிவு காவல் துறையினரும் இதுதொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: சேலத்தில் ரூ.37 கோடி மதிப்புடைய தங்க ஆபரணங்கள் பறிமுதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.