ஹைதராபாத்: போலி ஆவணங்களைப் பயன்படுத்தி கடவுச்சீட்டு பெற்று வந்த மோசடி கும்பலைச் சேர்ந்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த மோசடியில் ஏதேனும் வங்கதேச கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்பது குறித்தும் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர்கள் ஆறு பேரும், முறையான ஆவணங்கள் இன்றி வருபவர்களுக்கு, போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டு பெற்றுத் தந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது.
தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள கும்பலுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்பது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகக் காவல் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக இதுபோன்று போலி ஆவணங்கள் மூலம் சில கும்பல் கடவுச்சீட்டு பெற்றுத் தருவதாக பாஜக எம்பி ஒருவர் குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.