ETV Bharat / crime

போதையில் புத்தி மாறிய இளைஞரை போட்டுத்தள்ளிய 'அக்கா கேங்க்'

சென்னையில் தவறாக நடந்து கொண்ட இளைஞரை கட்டையால் தாக்கி கொலை செய்த 'அக்கா கேங்க்'-ஐ சேர்ந்த பெண் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

4 arrested in Chennai Youth Murder Case
4 arrested in Chennai Youth Murder Case
author img

By

Published : Jun 17, 2022, 2:05 PM IST

சென்னை: ராயப்பேட்டை காசிம் தெருவை சேர்ந்தவர் தாவித்ராஜா (20). இவர் ஜூன் 14ஆம் தேதி, ராயப்பேட்டை ஓய்எம்சிஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் மயங்கிய நிலையில் கிடந்தார். அப்போது, அவ்வழியாக ஆட்டோவில் வந்த அவரது தாய் தேவி, மகன் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

இயற்கைக்கு மாறான மரணம்: அங்கு ராஜாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து, தாய் தேவி தனது மகன் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் இயற்கைக்கு மாறான மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

உடற்கூராய்வு அறிக்கையில், தலையில் தாக்கப்பட்டதால் தாவித் ராஜா இறந்துள்ளதாக தெரியவந்தது. இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தபோது, 13ஆம் தேதி இரவு ஒரு ஆணும், பெண்ணும், ராஜாவை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்து ஒய்எம்சிஏ வாயில் அருகே உள்ள குப்பை தொட்டியோரம் படுக்கவைத்து விட்டு சென்றது தெரியவந்தது.

போதை பொருள் விற்பனை: இதனையடுத்து,தாவித் ராஜா வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை அடிப்படையில், ஆயிரம் விளக்கு பகுதியை சேர்ந்த சங்கீதா என்ற ரோஸி, ஜீவா, பார்த்திபன், ராயப்பேட்டையை சேர்ந்த ராஜேஷ் என்ற ராக்கி ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் ரோஸி கஞ்சா, போதை மாத்திரை வியாபாரி என்பதும், ஜீவா, பார்த்திபன், ராஜேஷ் ஆகிய இளைஞர்களை வைத்து கஞ்சா, போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது.

"அக்கா கேங்க்" என்ற பெயர் வைத்து கொண்டு ரோசி உடல் முழுவதும் டேட்டூ குத்திக்கொண்டு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் தாவித் ராஜா, இந்த அக்கா கேங்கில் சேர்ந்து ரோசி மற்றும் அவரது கூட்டாளிகளுடன் கஞ்சா, போதை மாத்திரைகளை உட்கொண்டு சுற்றி வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

போதையில் இதே போன்று, சம்பவ நாளன்று ராயப்பேட்டை சத்தியம் தியேட்டர் அருகே உள்ள பூங்காவில் தாவித்ராஜா உடன் ரோசி , ஜீவா, ராஜேஷ், பார்த்திபன் ஆகிய 4 பேரும் போதை மாத்திரை சாப்பிட்டு மது அருந்தியுள்ளனர். அப்போது உச்சக்கட்ட போதையில் இருந்த தாவித் ராஜா ரோசியிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

அப்போது ரோசி, ராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ரோசி மற்றும் அவரது கூட்டாளிகள், தாவித்ராஜாவை கட்டையால் தலையில் அடித்து உதைத்தனர். இதில், ராஜா மயக்கமடைந்துள்ளார்.

பின்னர், போதையில் தாவித் ராஜா இருப்பதாக நினைத்து ரோசி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராஜாவை இருசக்கர வாகனத்தில் ஏற்றி வந்து ஒய்எம்சிஏ அருகே உள்ள குப்பை தொட்டியோரம் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. அதன் பின்னர், தான் தாவித் ராஜா இறந்திருப்பது தெரியவந்ததாக விசாரணையில் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தலைமறைவாக இருந்த ரோசியை போலீசார் பிடிக்க சென்ற போது, பிளேடால் கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் தெரிவித்தனர். பின்னர், கொலை செய்த ரோசி உட்பட 4 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்களிடம் கொலைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், பிடிபட்ட ரோசி மீது கஞ்சா வழக்கும், ராஜேஷ் மீது கொலை முயற்சி மற்றும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: Video:கொடுத்த போனை திருப்பி கேட்ட ஒர்க் ஷாப் ஊழியருக்கு அரிவாள் வெட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.