மேற்கு வங்கத்தில் மே 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அப்போது பல இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டது. இதில் இருவேறு கட்சிகளைச் சேர்ந்த மூன்று கட்சி உறுப்பினர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சோனார்பூரில் தெற்கு 24 பர்கனஸ் பகுதியில் பாஜக கட்சியைச் சேர்ந்த ஹரன் ஆதிகரி என்பவர் உயிரிழந்துள்ளார். இரண்டாவது, கொல்கத்தாவின் பெலகாட்டாவில் அவிஜித் சர்க்கார் என்ற பாஜக கட்சி உறுப்பினர், அங்கு ஏற்பட்ட கலவரத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலும், வடக்கு 24 பர்கனஸின் தத்தபுகூரில் ஐ.எஸ்.எஃப் கட்சியைச் சேர்ந்த ஹசனூர் ரஹ்மான் என்பவர் குண்டுவெடிப்பில் உயிரிழந்துள்ளார். இச்சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள், இதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சிதான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: சிறையிலிருந்தே வெற்றி: பாஜக காங்கிரஸை வீழ்த்தி வரலாறு படைத்த அகில் கோகாய்