ETV Bharat / crime

ஷேர்சாட் தோழியுடன் மாயமான இளம்பெண்? பெற்றோர் புகார் - 18-year-old girl kidnapped

ஷேர்சாட்டில் அறிமுகமான தோழியுடன் பழகிவந்த இளம்பெண்ணை காணவில்லை என சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோர் புகாரளித்துள்ளனர்.

Kidnap
Kidnap
author img

By

Published : Jun 9, 2021, 11:16 PM IST

சென்னை: ஐ.சி.எஃப். பகுதியைச் சேர்ந்த 18 வயது சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். காணாமல்போன சிறுமி, தனக்கு ஷேர்சாட் மூலம் பழக்கமான 21 வயது இளம்பெண்ணை அவரது வீட்டில் இரண்டு வார காலம் தங்கவைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

அந்த 21 வயது பெண்ணை அழைத்துச் செல்ல இன்று காலை அவரது மாமா ஆட்டோவில் வந்துள்ளார். அப்போது காணாமல்போன சிறுமி, வழியனுப்பச் சென்றிருக்கிறார். வழியனுப்பச் சென்ற சிறுமி வெகுநேரமாகியும் வரவில்லை.

இதனால் அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக ஐ.சி.எஃப். காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தங்கள் வீட்டில் தங்கியிருந்த பெண் குறித்து எவ்வித தகவலும் தெரியாது எனச் சிறுமியின் பெற்றோர் தெரிவித்துள்ள நிலையில், காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: சர்ச்சைக்குள்ளான அம்பாசமுத்திரம் அம்பானி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.