வேலூர்: தமிழ்நாட்டிற்கு மற்ற மாவட்டங்களில் இருந்து ரயில் மூலமாக கஞ்சா கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனை தடுக்க ரயில்வே போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அவ்வப்போது சோதனைகள் கஞ்சா பொட்டலங்கள் மீட்கப்பட்டும் வருகின்றன.
அந்த வகையில், இன்று (செப் 8) ஜார்கண்ட் மாநிலம் ஹட்டியாவில் இருந்து எஸ்வந்பூர் செல்லும் பயணிகள் விரைவு ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இரண்டு பேரை பிடித்து ரயில்வே போலீசார் விசாரித்தனர். அப்போது அவர்களிடம் 16 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் இருவரும் ஒடிசாவை சேர்ந்த மனோனன் சாகு (33), குஞ்சபனாபேரா(31) என்பது தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: கர்நாடக அரசுப்பேருந்தில் பயணியை எட்டி உதைத்த நடத்துநர் - வைரலாகும் வீடியோ