ETV Bharat / city

வேலூர் மகளிர் குழுவினரின் நெகிழி ஒழிப்பு புரட்சி! - சிறப்புக் கட்டுரை

வேலூர்: நெகிழிக்கு மாற்றாக காகித பை, துணிப்பை தயாரிப்பதுடன் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு அசத்தும் பெண்கள் குறித்தான சிறப்புக் கட்டுரை இது.

women self help groups create plastic free environmen

author img

By

Published : Dec 5, 2019, 11:58 PM IST

பெண்கள் என்றாலே ஒரு காலத்தில் ஆண்களின் திருமண வாழ்க்கையை ஈடு செய்யும் ஒரு பொம்மையாகவே கருதப்பட்டனர். குறிப்பாக பெற்றோர் கை நீட்டும் ஆண்களுக்கு கழுத்தை நீட்டுவது, தனது கணவருக்கு நேரம் தவறாமல் சமைத்துப் போடுவது வீட்டு வேலைகளைப் பார்ப்பது என குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெண் சமுதாயம் அடைபட்டுக் கிடந்தது.

பின்னர் நாளடைவில் பாரதியார் போன்ற கவிஞர்களின் எழுத்துகளும் நவீன நாகரிக வளர்ச்சியும் பெண்களை சாதிக்கத் தூண்டியது. அந்த வரிசையில்தான் கல்பனா சாவ்லா, மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, திலகவதி ஐபிஎஸ், கிரண்பேடி என எண்ணற்ற பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்துவருகின்றனர்.

இப்படி அரசுத் துறைகளில் மட்டும் சாதனை புரிவதோடு நின்றுவிடாமல் மக்களை நல்வழிப்படுத்த சமுதாய புரட்சி செய்வதிலும் நாங்கள் சிறந்தவர்கள்தான் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் வேலூர் மாவட்ட மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள்.

அதாவது தமிழ்நாடு அரசின் நெகிழி தடை உத்தரவைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் நெகிழிக்குப் பதிலாக மாற்று பொருள்களை உபயோகப்படுத்த சத்தமில்லாமல் சாதித்துவரும் வேலூர் மகளிர் குழுவினர் குறித்து விளக்குகிறது இந்தச் செய்தி தொகுப்பு.

அதாவது தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியை தடை செய்தது. இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நெகிழி ஒழிப்புத் தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இது போன்று மாவட்ட நிர்வாகம் நெகிழியை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டுவந்தாலும் வேலூர் மாவட்ட மகளிர் குழுவைச் சேர்ந்த பெண்கள் நெகிழிக்கு மாற்றாக, மாற்று பொருள்களை உற்பத்தி செய்து அதை மக்களிடம் கொண்டுசேர்த்து அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்தனர்.

அதன்படி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுயஉதவிக் குழுவினர் நெகிழிக்கு மாற்றாக காட்டன் துணிகளாலான துணிப்பைகள் தயாரித்தல், செய்தித்தாள்களைக் கொண்டு கவர் தயாரித்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். அதன்படி வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த 'நியூ டைமண்ட்' மகளிர் குழுவினர் நெகிழிக்கு மாற்றாக காட்டன் துணிகளால் கைப்பைகளை தயாரித்து அதை பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்துவருகின்றனர்.

மேலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பைகளில் சம்பந்தப்பட்ட கடையின் பெயர்களை அச்சிடும் பணிகளையும் இந்தக் குழுவினர் மேற்கொண்டுவருகின்றனர். சிறிய பைகள் முதல் ஜவுளி கடைகளுக்குப் பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கட்டை பைகள் வரை தயாரித்துவருகின்றனர். இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வீட்டிலேயே இதற்காக தையல் இயந்திரம் அமைத்து நாள்தோறும் துணிப்பைகளை தைத்துவருகின்றனர். இதன்மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களுக்கும் வருமானம் கிடைப்பதாக இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து குழு தலைவர் சுமதி கூறுகையில், "நாங்கள் இதற்கு முன்பு ஃபேன்ஸி கவரிங் உள்ளிட்ட தொழிலை செய்துவந்தோம். ஆனால் அரசு நெகிழிப் பொருள்களுக்குத் தடை விதித்தப் பிறகு துணிப்பை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம். காட்டன் துணிகளைக் கொண்டு கட்டை பை தைத்து கொடுக்கிறோம். பெரிய கடைகள் ஆர்டர் கொடுக்கிறார்கள், அவர்களுக்கு ஏற்றாற்போல் கடைகள், உணவகங்கள், திருமண நிகழ்ச்சிகளுக்குத் தைத்து கொடுக்கிறோம்" என்றார்.

சுமதி -நியூ டைமண்ட் குழுத் தலைவர்

இந்தக் குழுவில் வேலை செய்யும் பரிமளா கூறுகையில், நாங்கள் நெகிழித் தடைசெய்யப்பட்டுள்ளதால் கட்டை துணிப்பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறோம். எங்களுக்கு ஒவ்வொரு பீஸ் அடிப்படையில் குழுத்தலைவர் கூலி தருகிறார் என்று தெரிவித்தார்.

இது ஒருபுறமிருக்க வேலூர் திருவலத்தைச் சேர்ந்த 'ஓம் சக்தி' மகளிர் குழுவினர் நெகிழிக்கு மாற்றாக செய்தித்தாள்களைக் கொண்டு பேப்பர் கவர் தயாரித்து அசத்திவருகின்றனர். அதாவது மளிகைக் கடைகளில் நெகிழிப் பைகள் மூலம் பொருள்கள் வாங்குவதை ஒழிப்பதற்காக செய்தித்தாள்களை பல்வேறு வடிவங்களில் ஒட்டி அதை கவர் போன்று தயாரிக்கின்றனர்.

ஓம்சக்தி மகளிர் குழு உறுப்பினர்கள்

பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சாதாரண தாளைக்கூட விட்டுவைக்காமல் அதிலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தக் குழுவினர் இதுபோன்று காகித கவர்களை தயாரித்துவருகின்றனர். தங்கள் வீடுகளில் மொத்தமாக அமர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்று தாள்களைச் சேகரித்து அட்டைகளைக் கொண்டு தாள் மீது வைத்து ஒட்டி அதன்மூலம் காகிதக் கவரை தயாரித்து அருகில் உள்ள மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர். மகளிர் சுயமாக தங்கள் சொந்த காலில் நிற்கவேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த மகளிர் சுய உதவி குழுக்களை ஆரம்பித்துள்ளது. இதற்கு முன்னுதாரணமாக வேலூர் மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் செயல்படுகிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை.

ஓம்சக்தி மகளிர் குழு உறுப்பினர்

என்னதான் ஆர்வத்துடன் இது போன்ற பணியில் ஈடுபட்டாலும் அரசு நெகிழி தடை உத்தரவைத் தொடர்ந்து கண்காணிக்காததால் தற்போது காகிதக் கவருக்கு மவுசு குறைந்துள்ளதாக இந்தக் குழுவைச் சேர்ந்த பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இது குறித்து ஓம் சக்தி மகளிர் குழுவைச் சேர்ந்த நிர்மலா கூறுகையில், "நாங்கள் வீட்டில் தறி நெய்யும் வேலை செய்துவருகிறோம். இதுபோக நேரம் கிடைக்கும்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இது போன்ற காகிதக் கவர்களை தயார் செய்துவருகிறோம். இதை அருகில் உள்ள மளிகைக் கடைகளுக்குக் கொடுத்து விற்பனை செய்கிறோம். தீங்கு விளைவிக்கக்கூடிய நெகிழி நமக்கு வேண்டாம். எல்லோரும் காகித கவர் பயன்படுத்த வேண்டும், இந்தக் காகித கவரை ஆரம்பத்தில் நல்ல முறையில் விற்பனை செய்துவந்தோம். ஆனால் மீண்டும் நெகிழிப் பயன்பாடு அதிகரித்துள்ளதால் எங்கள் கவர் விற்பனை குறைந்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மீண்டும் இதுபோன்ற காகிதக் கவர் விற்பனையை அதிகரிக்கமுடியும்" என்றார்.

நிர்மலா- ஓம்சக்தி மகளிர் குழு உறுப்பினர்

இந்தக் குழுவினர் தயாரிக்கும் காகிதக் கவர்களை அருகில் உள்ள மளிகைக் கடைக்காரர் தமிழ்வாணன் மூலம் மாவட்டம் முழுவதும் பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்துவருகின்றனர். நெகிழிப் பைகளை விட காகிதக் கவரில் எளிதில் பார்சல் செய்ய முடியும் என தெரிவிக்கிறார் தமிழ்வாணன்.

இதுகுறித்து தமிழ்வாணன் கூறுகையில், "இந்தப் பகுதியில் 30 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்திவருகிறேன். இங்கு உள்ள மகளிர் குழு மூலம் காகிதக் கவர் வாங்கி வருகிறேன் சாதாரணமாக பேப்பரில் பார்சல் செய்வதைவிட இந்த பெண்கள் தயாரிக்கும் காகிதக் கவரில் பொருட்களை பார்சல் செய்வது மிகவும் எளிதாக உள்ளது. ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ வரை இந்த காகிதக் கவரில் பார்சல் செய்ய முடியும். என்னைப் பார்த்து ஏராளமான கடைக்காரர்கள் காகிதக் கவர்களை வாங்கி வந்தனர். நானே மார்க்கெட்டிற்கு சென்று இதை விற்பனை செய்துவந்தேன். தினமும் 30 முதல் 40 கிலோ வரை விற்பனையாகி வந்தது. ஆனால் மீண்டும் நெகிழி கவர் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் எங்களிடம் காகிதக் கவர் விற்பனை குறைந்துள்ளது. நான் எனது கடையில் எப்போதும் காகிதக் கவரை மட்டுமே பயன்படுத்துகிறேன். என்னைப்போல் அனைத்து கடைக்காரர்களும் இதை பின்பற்ற வேண்டும். அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் நெகிழியை முற்றிலும் ஒழித்து இதுபோன்ற காகிதக் கவர்கள் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்றார்.

தமிழ்வாணன்

இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் உள்பட 14க்கும் மேற்பட்ட நெகிழிப் பொருட்களை தமிழ்நாடு அரசு தடை செய்துள்ளது. வேலூர் மாவட்டத்தில் நெகிழி உற்பத்தி செய்யும் இடம் எங்கும் இல்லை, இருப்பினும் ஒரு சில இடங்களில் நெகிழிப் பைகளை பதுக்கிவைக்கின்றனர். அரக்கோணத்தில் ஒரு டன் எடையுள்ள நெகிழிப் பைகளை பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைத்தோம். பெரியப்பெரிய கடைகளில் விதிமுறைகளைக் கடைப்பிடித்து நெகிழிக்கு மாற்றாக காகிதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், சிறு சிறு வியாபாரிகள் தொடர்ந்து நெகிழிப் பைகளை பயன்படுத்துகிறார்கள். இதற்காகத் தொடர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேலூர் மாவட்டத்தைப் பொருத்தவரை 13 இடங்களில் வேறு மாநில எல்லை அமைந்துள்ளது. அங்கு சோதனை சாவடிகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடக மாநிலத்திலிருந்து நெகிழிப் பொருட்கள் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சோதனைச்சாவடிப் பகுதிகளில் உணவுப் பாதுகாப்பு அலுவலர்களும் சோதனை நடத்தி வருகிறோம்.

ரகசிய சோதனை மூலமே இது போன்று பிற மாநிலங்களிலிருந்து வரும் நெகிழிப் பொருட்களை பிடிக்கமுடியும். கேரளா மாநிலத்திலும் நெகிழி தடைசெய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக நெகிழிக்கு மாற்று பொருட்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதன்மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது. நெகிழிப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாகத் தகவல் கிடைத்தால் புகார் தெரிவிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் நம்பரை வெளியிட்டுள்ளது. எனவே பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். உள்ளாட்சி அமைப்புகளில் நெகிழி தடை தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். எனவே நெகிழி தடை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்" என்றார்.

இதற்கிடையில் காவேரிப்பாக்கம் அற்புதம் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் நெகிழிக்கு மாற்றாக பத்து ஏக்கர் வாழை தோப்பை குத்தகைக்கு எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதாவது ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் நெகிழி இலையை ஒழிப்பதற்காக வாழையிலை பயன்பாட்டை அதிகரிக்க இந்த குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர். இதற்காக தங்கள் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் இப்பெண்கள்.

தினமும் இந்தக் குழுவை சேர்ந்த பெண்கள் வாழை இலைகளை அறுத்து தலையில் சுமந்தபடி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர். பின்னர் குழுவாக அமர்ந்து வாழை இலைகளை ஆர்டருக்கு ஏற்றபடி நீளமாகவும் வட்ட வடிவத்திலும் வெட்டி ஹோட்டல்கள், வீடுகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர். சமையலறையில் நேரத்தைச் செலவிடும் பெண்களுக்கு மத்தியில் வயக்காட்டுக்கு சென்று சேலையை மடித்துக்கொண்டு விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டுவதுடன் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் சத்தமில்லாமல் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அற்புதம் குழுவைச் சேர்ந்த மைதிலி கூறுகையில் "நாங்கள் சொந்தமாக வாழை பயிரிட்டு அதிலிருந்து இலையை அறுத்து விற்பனை செய்கிறோம் பிளாஸ்டிக் தடை செய்வதால் எல்லோரும் வாழை இலையை பயன்படுத்த வேண்டும்" என்றார்.

இதுகுறித்து காவேரிப்பாக்கம் பகுதி மகளிர் குழுவின் சமுதாய அமைப்பாளர் மஞ்சு கூறுகையில், "எனக்கு கீழ் 25 மகளிர் குழுக்கள் உள்ளனர். இதில் இந்த குழுவைச் சேர்ந்த பெண்கள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் அரசுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சொந்தமாக பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழையைப் பயிரிட்டுள்ளனர். இதிலிருந்து கிடைக்கும் வாழை இலை, வாழைத்தார், வாழைப்பூ ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர். கல்யாண நிகழ்ச்சிகள், ஹோட்டல்கள், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுத்து எங்கள் குழுவை சேர்ந்த பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதன்மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது" என்றார்.

ஶ்ரீ குழு உறுப்பினர் ஹேமலதா கூறுகையில், "வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் பிளாஸ்டிக் தடையை வலியுறுத்தியும் நாங்களே சொந்தமாக வாழைத்தோப்பில் வாழையிலை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்கிறோம்" என்றார். சுமதி கூறுகையில், "எனது கணவர் நாங்கள் தயார் செய்யும் இலையை விற்பனை செய்துத்தருகிறார். நாங்கள் சொந்தமாக வாழைத்தோப்பில் வாழை உற்பத்தி செய்து ஓட்டல் கடைகள், திருமண நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்கிறோம். இதன் மூலம் வருங்காலத்தினருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும். எங்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கிறது. நாளொன்றுக்கு 50 கட்டுகளை அறுக்கிறோம் மொத்தம் 10 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளோம்" என்றார்.

நெகிழி பயன்பாட்டை ஒழிக்கவும், நெகிழிக்கு மாற்றாக வேறு பொருட்களைப் பயன்படுத்தவும் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் எடுத்து வரும் இதுபோன்ற முயற்சிகள் அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: கடந்தாண்டு 27 ஆயிரம் டன் நெகிழிக் கழிவுகள் எரிபொருளாக உபயோகம் - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்

Intro:வேலூர் மாவட்டம்

நெகிழி ஒழிப்பு புரட்சியில் களமிறங்கிய வேலூர் மகளிர் குழுவினர்

நெகிழிக்கு மாற்றாக காகிதக் கவர் துணிப்பை தயாரிப்பதுடன் 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டு அசத்தும் பெண்கள்Body:பெண்கள் என்றாலே ஒரு காலத்தில் ஆண்களின் திருமண வாழ்க்கையை ஈடு செய்யும் ஒரு பொம்மையாகவே கருதப்பட்டனர் குறிப்பாக பெற்றோர்கள் கை நீட்டும் ஆண்களுக்கு கழுத்தை நீட்டுவது தனது கணவருக்கு நேரம் தவறாமல் சமைத்துப் போடுவது வீட்டு வேலைகளை பார்ப்பது என குறிப்பிட்ட ஒரு எல்லைக்குள் பெண்கள் சமுதாயம் அடைபட்டுக் கிடந்தது பின்னர் நாளடைவில் பாரதியார் போன்ற கவிஞர்களின் எழுத்துக்களும் நவீன நாகரிக வளர்ச்சியும் பெண்களை சாதிக்கத் தூண்டியது அந்த வரிசையில்தான் கல்பனா சாவ்லா டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி திலகவதி ஐபிஎஸ் கிரண்பேடி என எண்ணற்ற பெண்கள் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்து வருகின்றனர் இப்படி அரசு துறைகளில் மட்டும் சாதனை புரிவதோடு நின்றுவிடாமல் மக்களை நல்வழிப்படுத்த சமுதாய புரட்சி செய்வதிலும் நாங்கள் சிறந்தவர்கள் தான் என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர் வேலூர் மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள். அதாவது தமிழக அரசின் நெகிழி தடை உத்தரவை தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் நெகிழிக்கு பதிலாக மாற்று பொருட்களை உபயோகப்படுத்த சத்தமில்லாமல் சாதித்து வரும் வேலூர் மகளிர் குழுவினர் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு. அதாவது தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் முதல் தமிழகத்தில் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய நெகிழியை தடை செய்தது இதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் நெகிழி ஒழிப்பு தொடர்பான பல்வேறு விழிப்புணர்வு நடைபெற்றன. இது போன்று மாவட்ட நிர்வாகம் நெகிழியை ஒழிக்க முயற்சிகளை மேற்கொண்டு வந்தாலும் வேலூர் மாவட்ட மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் நெகிழிக்கு மாற்றாக மாற்று பொருட்களை உற்பத்தி செய்து அதை மக்களிடம் கொண்டு சேர்த்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வந்தனர் அதன்படி வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு மகளிர் சுய உதவிகுழுவினர் நெகிழிக்கு மாற்றாக காட்டன் துணிகளால் ஆன துணிப்பைகள் தயாரித்தல் மற்றும் செய்தித்தாள்களை கொண்டு பேப்பர் கப் கவர் தயாரித்தல் என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் அதன்படி வேலூர் தோட்டப்பாளையம் பகுதியைச் சேர்ந்த "நியூ டைமண்ட்" மகளிர் குழுவினர் நெகிழிக்கு மாற்றாக காட்டன் துணிகளால் கைப்பைகளை தயாரித்து அதை பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் மேலும் அவர்கள் உற்பத்தி செய்யும் பைகளில் சம்மந்தப்பட்ட கடையின் பெயர்களை அச்சிடும் பணிகளையும் இந்த குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர் சிறிய பைகள் முதல் ஜவுளி கடைகளுக்கு பயன்படுத்தப்படும் பெரிய அளவிலான கட்டை பைகள் வரை தயாரித்து வருகின்றனர் இந்த குழுவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வீட்டிலேயே இதற்காக தையல் இயந்திரம் அமைத்து நாள்தோறும் துணிப்பைகளை தைத்து வருகின்றனர் இதன் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி தங்களுக்கும் வருமானம் கிடைப்பதாக இந்த குழுவை சேர்ந்த பெண்கள் தெரிவிக்கின்றனர் இதுகுறித்து குழு தலைவர் சுமதி கூறுகையில், "நாங்கள் இதற்கு முன்பு பேன்சி கவரிங் உள்ளிட்ட தொழிலை செய்து வந்தோம் ஆனால் அரசு பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்த பிறகு துணி பை தயாரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம் காட்டன் துணிகளை கொண்டு கட்டை பை தைத்து கொடுக்கிறோம் பெரிய பெரிய கடைகள் ஆர்டர் கொடுக்கிறார்கள் அவர்களுக்கு ஏற்றார் போல் கடை கடைகள் ஓட்டல்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளுக்கு தைத்து கொடுக்கிறோம் என்றார் இந்த குழுவில் வேலை செய்யும் பரிமளா கூறுகையில், " நாங்கள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் கட்டை துணி பை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறோம் எங்களுக்கு ஒவ்வொரு பீஸ் அடிப்படையில் குழு தலைவர் கூலி தருகிறார் என்று தெரிவித்தார் இது ஒருபுறமிருக்க வேலூர் திருவலத்தை சேர்ந்த "ஓம் சக்தி" மகளிர் குழுவினர் நெகிழிக்கு மாற்றாக செய்தித்தாள்களை கொண்டு பேப்பர் கவர் தயாரித்து அசத்தி வருகின்றனர் அதாவது மளிகைக் கடைகளில் நெகிழிப் பைகள் மூலம் பொருட்கள் வாங்குவதை ஒழிப்பதற்காக செய்தித்தாள்களை பல்வேறு வடிவங்களில் ஒட்டி அதை கவர் போன்ற தயாரிக்கின்றனர் பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக சாதாரண வேஸ்ட் பேப்பர் கூட விட்டு வைக்காமல் அதிலிருந்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த குழுவினர் இதுபோன்று காகித கவர்களை தயாரித்து வருகின்றனர் குழுவைச் சேர்ந்த பெண்கள் தங்கள் வீடுகளில் மொத்தமாக அமர்ந்து நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுபோன்று காகித பேப்பர்களை சேகரித்து அட்டைகளைக் கொண்டு அந்த பேப்பர் மீது வைத்து ஒட்டி அதன் மூலம் காகித கவரை தயாரித்து அருகில் உள்ள மளிகை கடைகளுக்கு விற்பனை செய்கின்றனர் மகளிர்கள் சுயமாக தங்கள் சொந்த காலில் நிற்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு இந்த மகளிர் சுய உதவி குழுக்களை ஆரம்பித்துள்ளது இதற்கு முன்னுதாரணமாக வேலூர் மாவட்டத்தில் மகளிர் குழுக்கள் செயல்படுகிறது என்றால் அதில் மாற்றுக் கருத்தில்லை என்னதான் ஆர்வத்துடன் இது போன்ற பணியில் ஈடுபட்டாலும் அரசு நெகிழி தடை உத்தரவை தொடர்ந்து கண்காணிக்காததால் தற்போது இந்த காகிதக் கவருக்கு மவுசு குறைந்துள்ளதாக இந்த குழுவை சேர்ந்த பெண்கள் வேதனை தெரிவிக்கின்றனர் இதுகுறித்து ஓம் சக்தி மகளிர் குழுவை சேர்ந்த நிர்மலா கூறுகையில், "நாங்கள் வீட்டில் தறி நெய்யும் வேலை செய்துவருகிறோம் இது போக நேரம் கிடைக்கும்போது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் இது போன்ற காகிதக் கவர்களை தயார் செய்து வருகிறோம் இதை அருகில் உள்ள மளிகை கடைகளுக்கு கொடுத்து விற்பனை செய்கிறோம் தீங்கு விளைவிக்கக்கூடிய நெகிழி நமக்கு வேண்டாம் எல்லோரும் காகித கவர் பயன்படுத்த வேண்டும் இந்த காகிதக் அவர் ஆரம்பத்தில் நல்ல முறையில் விற்பனை செய்து வந்தோம் ஆனால் மீண்டும் நெகிழி பயன்பாடு அதிகரித்துள்ளதால் எங்கள் கவர் விற்பனை குறைந்துள்ளது எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்தால் மீண்டும் இதுபோன்ற காகிதக் கவர் விற்பனையை அதிகரிக்க முடியும் என்றார் இந்த குழுவினர் தயாரிக்கும் காகிதக் அவர்களை அருகில் உள்ள மளிகை கடைக்காரர் தமிழ்வாணன் மூலம் மாவட்டம் முழுதும் பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர் நெகிழிக் பைகளை விட காகித கவரில் எளிதில் பார்சல் செய்ய முடியும் என தெரிவிக்கிறார் தமிழ்வாணன் இதுகுறித்து அவர் கூறுகையில், இந்த பகுதியில் 30 ஆண்டுகளாக மளிகைக் கடை நடத்தி வருகிறேன் இங்கு உள்ள மகளிர் குழு மூலம் காகித கவர் வாங்கி வருகிறேன் சாதாரணமாக பேப்பரில் பார்சல் செய்வதைவிட இந்த பெண்கள் தயாரிக்கும் காகிதக் கவரில் பொருட்களை பார்சல் செய்வது மிகவும் எளிதாக உள்ளது ஒரு கிலோ முதல் ஐந்து கிலோ வரை இந்த காகிதக் கவரில் பார்சல் செய்ய முடியும் என்னை பார்த்து ஏராளமான கடைக்காரர்கள் காகிதக் கவர்களை வாங்கி வந்தனர் நானே மார்க்கெட்டிற்கு சென்று இதை விற்பனை செய்து வந்தேன். தினமும் 30 முதல் 40 கிலோ வரை விற்பனையாகி வந்தது ஆனால் மீண்டும் நெகிழி கவர் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் எங்களிடம் காகிதக் கவர் விற்பனை குறைந்துள்ளது நான் எனது கடையில் எப்போதும் காகிதக் கவரை மட்டுமே பயன்படுத்துகிறேன் என்னை போல் அனைத்து கடைக்காரர்களும் இதை பின்பற்ற வேண்டும் அரசும் உரிய நடவடிக்கை எடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினால் நெகிழியை முற்றிலும் ஒழித்து இதுபோன்ற காகிதக் கவர்கள் பயன்பாட்டை அதிகரிக்க முடியும் என்றார். இதுகுறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரத்திடம் கேட்டபோது, "சிங்கிள் யூஸ் பிளாஸ்டிக் உள்பட 14க்கும் மேற்பட்ட நெகிழிப் பொருட்களை தமிழக அரசு தடை செய்துள்ளது வேலூர் மாவட்டத்தில் நெகிழி உற்பத்தி செய்யும் இடம் எங்கும் இல்லை இருப்பினும் ஒரு சில இடங்களில் நெகிழிப் பைகளை பதுக்கிக வைக்கின்றனர் அரக்கோணத்தில் ஒரு டன் நெகிழிப் பைகள் பதுக்கி வைத்திருந்த குடோனுக்கு சீல் வைத்தம். பெரிய பெரிய கடைகளில் விதிமுறைகளைக் கடைப்பிடித்து நெகிழிக்கு மாற்றாக காகிதங்களை பயன்படுத்தி வருகின்றனர் ஆனால் சிறு சிறு வியாபாரிகள் தொடர்ந்து நெகிழிப் பைகளை பயன்படுத்துகிறார்கள். இதற்காக தொடர் சோதனை நடத்தி நடவடிக்கை எடுத்து வைக்கிறோம் வேலூர் மாவட்டத்தை பொருத்தவரை 13 இடங்களில் வேறு மாநில எல்லை அமைந்துள்ளது அங்கு சோதனை சாவடிகள் உள்ளன ஆந்திரா கர்நாடக மாநிலத்திலிருந்து நெகிழிப் பொருட்கள் வரக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது எனவே சோதனைச்சாவடி பகுதிகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் சோதனை நடத்தி வருகிறோம் ரகசிய சோதனை மூலமே இது போன்று பிற மாநிலங்களிலிருந்து வரும் நெகிழிப் பொருட்களை பிடிக்க முடியும் கேரளா மாநிலத்திலும் நெகிழிக்கு தடைசெய்யப்பட்டுள்ளது மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலமாக நெகிழிக்கு மாற்று பொருட்கள் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம் இதன்மூலம் அவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கிறது நெகிழிப் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தால் புகார் தெரிவிப்பதற்காக மாவட்ட நிர்வாகம் வாட்ஸ்அப் நம்பரை வெளியிட்டுள்ளது எனவே பொதுமக்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் நெகிழி தடை தொடர்பாக பொதுக்கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம் எனவே நெகிழி தடை நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்றார்

இதற்கிடையில் காவேரிப்பாக்கம் அற்புதம் மகளிர் குழுவை சேர்ந்த பெண்கள் நெகிழிக்கு மாற்றாக பத்து ஏக்கர் வாழை தோப்பை குத்தகைக்கு எடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளனர். அதாவது ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் நெகிழி இலையை ஒழிப்பதற்காக வாழையிலை பயன்பாட்டை அதிகரிக்க இந்த குழுவினர் முயற்சி செய்து வருகின்றனர் இதற்காக குழுவை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதியில் 10 ஏக்கர் பரப்பளவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து வாழை மரங்களை பயிரிட்டுள்ளனர் தினமும் இந்த குழுவை சேர்ந்த பெண்கள் வாழை இலைகளை அறுத்து தலையில் சுமந்தபடி வீட்டிற்கு எடுத்து வருகின்றனர் பின்னர் குழுவாக அமர்ந்து வாழை இலைகளை ஆர்டருக்கு ஏற்றபடி நீளமாகவும் வட்ட வடிவத்திலும் வெட்டி ஹோட்டல்கள் வீடுகள் திருமண நிகழ்ச்சிகளுக்கு சப்ளை செய்து வருகின்றனர் சமையலறையில் நேரத்தைச் செலவிடும் பெண்களுக்கு மத்தியில் வயக்காட்டுக்கு சென்று சேலையை மடித்துக்கொண்டு விவசாயம் செய்து வருமானத்தை ஈட்டுவதுடன் பொதுமக்களுக்கு ஒரு விழிப்புணர்வையும் சத்தமில்லாமல் ஏற்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது இதுகுறித்து அற்புதம் குழுவைச் சேர்ந்த மைதிலி கூறுகையில் நாங்கள் சொந்தமாக வாழை பயிரிட்டு அதிலிருந்து இலையை அறுத்து விற்பனை செய்கிறோம் பிளாஸ்டிக் தடை செய்வதால் எல்லோரும் வாழை இலையை பயன்படுத்த வேண்டும் என்றார் இதுகுறித்து காவேரிப்பாக்கம் பகுதி மகளிர் குழுவின் சமுதாய அமைப்பாளர் மஞ்சு கூறுகையில் எனக்கு கீழ் 25 மகளிர் குழுக்கள் உள்ளனர் இதில் இந்த குழுவைச் சேர்ந்த பெண்கள் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளதால் அரசுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சொந்தமாக பத்து ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் வாழை பயிரிட்டுள்ளனர் இதில் இருந்து கிடைக்கும் வாழை இலை வாழைத்தார் வாழைப்பூ ஆகியவற்றை விற்பனை செய்து வருகின்றனர் கல்யாண நிகழ்ச்சிகள் ஹோட்டல்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆர்டர் எடுத்து எங்கள் குழுவை சேர்ந்த பெண்கள் விற்பனை செய்து வருகின்றனர் இதன்மூலம் அவர்களுக்கு வருமானமும் கிடைக்கிறது என்றார்ஶ்ரீ குழு உறுப்பினர் ஹேமலதா கூறுகையில் வருங்கால சந்ததியினர் பயன்பெறும் வகையில் பாஸ்டிக் தடையை வலியுறுத்தியும் நாங்களே சொந்தமாக வாழைத்தோப்பில் வாழையிலை உற்பத்தி செய்து அதை விற்பனை செய்கிறோம் என்றார் சுமதி கூறுகையில் எனது கணவர் நாங்கள் தயார் செய்யும் இலையை விற்பனை செய்து தருகிறார். நான் சொந்தமாக வாழைத்தோப்பில் வாழை உற்பத்தி செய்து ஓட்டல் கடைகள் திருமண நிகழ்ச்சிகளுக்கு விற்பனை செய்கிறோம் இதன் மூலம் வருங்காலத்தினருக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படும் எங்களுக்கு போதிய அளவு வருமானம் கிடைக்கிறது நாளொன்றுக்கு 50 கட்டுகளை அறுக்கிறோம் மொத்தம் 10 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளோம் என்றார். நெகிழி பயன்பாட்டை ஒழிக்கவும் நெகிழிக்கு மாற்றாக வேறு பொருட்களை பயன்படுத்தவோம் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் குழுவினர் எடுத்து வரும் இதுபோன்ற முயற்சி அனைவர் மத்தியிலும் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது

ஈடிவி பாரத் செய்திகளுக்காக வேலூரிலிருந்து செய்தியாளராக ஆர்.மணிகண்டன்

பேட்டி

1. சுமதி ( நியூ டைமன்ட் குழு தலைவர்)

2. பரிமளா( """ குழு உறுப்பினர்)

3. நிர்மலா ( ஓம்சக்தி மகளிர் குழு உறுப்பினர்)

4. தமிழ்வாணன்( மளிகைக்கடைக்காரர்)

5. சண்முகசுந்தரம் ( வேலூர் மாவட்ட ஆட்சியர்)

6. மைதிலி ( அற்புதம் மகளிர் குழு உறுப்பினர்)

7. மஞ்சு ( அற்புதம் குழு தலைவர்)

8. ஹேமலதா( குழு உறுப்பினர்)

9. சுமதி ( கேழு உறுப்பினர்)Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.