வேலூர்: 76-வது சுதந்திர தினத்தினை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்நிலையில் சாலை விதிகளை கடைபிடிக்கும் வகையில் வேலூர் மாநகரில், தனியார் அமைப்பு மூலம் பாரம்பரிய கார் (வின்டேஜ்) அணிவகுப்பு நடைபெற்றது.
இதில் தேசிய கொடியுடன் 20 க்கும் மேற்பட்ட பாரம்பரிய கார்களில் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டி விழிப்புணர்வு பதாகைகளுடன் அணிவகுத்து சென்றனர்.
இந்த பாரம்பரிய கார் அணிவகுப்பு தொரப்படி, ஆட்சியர் பங்களா, முஸ்லிம் ஸ்கூல் ரவுண்டானா, ராஜா பஸ் ஸ்டாப், பழைய பேருந்து நிலையம் வழியாக சென்று கிரீன்சர்கிள் பகுதியில் முடிவடைந்தது.
ஊர்வலத்தில் பழைய மாடல் பென்ஸ், பியட், ஜீப் உள்ளிட்ட பல்வேறு ரக வாகனங்கள் பங்கேற்றன. விழிப்புணர்வு கார் அணிவகுப்வை ஆர்வமுடன் கண்டு ரசித்த பொதுமக்கள் கார்கள் முன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
இதையும் படிங்க: ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்தை புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி