ETV Bharat / city

பழங்குடிகளின் கான்கிரீட் வீடு கனவு நிறைவேறுமா? - பழங்குடியினர் குடிசைகள்

வேலூர்: விவசாயம் மட்டுமே தெரிந்த பழங்குடி மக்கள் எல்லா காலத்திற்கும் உறுதியான கான்கிரீட் வீடுகள் வேண்டி அரசிடம் பன்னெடுங்காலமாக கோரிக்கைவைத்தபடி இருக்கின்றனர். கோரிக்கைகள் மனுக்களாக இருக்கின்றனவே தவிர இன்னும் மனைகளாகவில்லை. எட்டாக்கனியாகவே இருக்கும் அவர்களின் கனவை படம்பிடிக்கிறது இத்தொகுப்பு...

hut
hut
author img

By

Published : Feb 22, 2020, 9:10 PM IST

ஏழை மக்களின் முன்னேற்றத்திற்காக பசுமை வீடுகள், தொகுப்பு வீடுகள் என மத்திய, மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினாலும், மலைக்கிராம மக்களுக்கு அது இன்றும் எட்டாக்கனியாகவே உள்ளது. வேலூர் - திருவண்ணாமலை மாவட்ட எல்லையோரத்தில் உள்ள அமிர்தி வன உயிரியல் பூங்கா மலையடிவாரத்தில் அடர்ந்த விவசாயப் பகுதிகளுக்கு இடையே காளான் பூத்தது போன்று அமைந்துள்ளது அமிர்தி குக்கிராமம். விவசாயம் மட்டுமே தெரிந்த இக்கிராம மக்கள், தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் நிலங்களில் குடில் அமைத்து வாழ்ந்துவருகின்றனர்.

சொற்ப வருமானத்தை வைத்து தங்கள் நிலங்களில் குடில் அமைத்து வாழ்ந்து வருகின்றனர்

எந்த ஆடம்பரமும் இல்லாமல் இயற்கையோடு இணைந்து வாழ்ந்துவந்தாலும் தங்கள் குழந்தைகளின் நலனுக்காக கான்கிரீட் வீடு கட்டி நிம்மதியாக வாழ வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கனவாக இருக்கிறது. போதிய வருமானம் இல்லாததாலும், பலமுறை வருவாய்த் துறை அலுவலர்களிடம் மனு அளித்தும் அரசிடமிருந்து வீடுகட்ட எந்த உதவியும் கிடைக்காததாலும் வேதனையுடன் வாழ்ந்துவருகின்றனர் இப்பழங்குடிகள்.

அரசிடமிருந்து வீடுகட்ட எந்த உதவியும் கிடைக்காததால் வேதனையுடன் வாழ்ந்து வருகின்றனர் இப்பழங்குடிகள்

வீட்டுக்காவல் ஒருபுறமிருக்க விவசாயத்தைக் காப்பதும் இவர்களுக்கு பெரும் சவாலாக இருக்கிறது. மலையடிவாரம் என்பதால் விலங்குகள் தானியங்களைச் சேதப்படுத்தி விளைவித்த பொருள்களை அறுவடை செய்ய முடியாமல் தவிக்கின்றனர். பலமுறை கோரிக்கைவைத்தும் விலங்குகளைக் கட்டுப்படுத்த வனத் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர். கடைக்கோ, மருத்துவமனைக்கோ செல்ல பல கிலோமீட்டர் தூரம் அலைய வேண்டியுள்ளது எனக்கூறும் இவர்கள், ஊரின் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஊரின் அருகில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனை பெரும்பாலும் பூட்டியே கிடப்பதாகவும் தெரிவிக்கின்றனர்

தேர்தல் நேரங்களில் அதைச் செய்கிறோம், இதைச் செய்கிறோம் என்று வாக்குக் கேட்டுவரும் அரசியல்வாதிகளும் சரி, மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அலுவலர்களும் சரி, இதுவரை தங்கள் பகுதியை எட்டிப் பார்த்ததே கிடையாது என்று இப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

குடிசைகள் இல்லா தமிழ்நாடு அமைப்போம் எனத் தேர்தலுக்குத் தேர்தல் வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கு இந்த மலையடிவாரமும் தமிழ்நாட்டில்தான் உள்ளது என்பதை யாராவது கூறுவார்களா?

இதையும் படிங்க: உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைப்பதில்லை - நலிவடைந்துவரும் கைத்தறி நெசவுத்தொழில்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.