வேலூர் மாவட்டம் அல்லேரி மலைப்பகுதியில் வாழும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வகுமார் வழங்கினார்.
மேலும் அப்பகுதியில் நீண்ட காலமாக நிலவிவரும் மின்சாரப் பிரச்னை, மாவட்ட காவல் துறை எடுத்த முயற்சியால் சரிசெய்யப்பட்டது. 180 வாட் மின்சாரத்தை 220 வாட் ஆகவும், 310 வாட் மின்சாரத்தை 390 வாட் ஆகவும் அதிகரித்து பீஞ்சமந்தை, கத்திய பெட், புதூர், முத்தனூர், தொங்குமலை உள்ளிட்ட பகுதிகளில் ட்ரான்ஸ்ஃபார்மர் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு தேவையான வசதிகள் பூர்த்தி செய்யப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உறுதியளித்துள்ளார். இந்த உதவி தங்களின் வாழ்வாதரத்தை ஓரளவு மேம்படுத்தும் என்று அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: நடுரோட்டில் பொதுமக்களுக்கு டிஎஸ்பி விழிப்புணர்வு!