வேலூர்: திமுகவின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மகன், மக்களவை உறுப்பினர் கதிர் ஆனந்தின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், அந்த ஹேக் செய்யப்பட்டுள்ள ட்விட்டர் கணக்கிலிருந்து தேவையற்று பதிவுகள் வந்த வண்ணம் உள்ளது.
எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "என்னுடைய @dmkathiranand என்ற ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. இந்த ட்விட்டர் கணக்கில் பதிவிடப்படும் தகவல், செய்தி மற்றும் பதிவுகளுக்கும் எனக்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை.
எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம்
எனவே, எனது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செய்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நல்ல நேரம் போஸ்ட் - துரைமுருகன் மகனுக்கு கெட்ட நேரம்