ETV Bharat / city

முருகனின் உயிரை காக்க முதலமைச்சர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! - முருகனின் உயிரை காக்க முதலமைச்சர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

வேலூர் : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் ஆண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகளின் உயிரை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவரது வழக்கறிஞர் புகழேந்தி பாண்டியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Vellore jail administration denies permission to prosecutor to meet Murugan
முருகனின் உயிரை காக்க முதலமைச்சர் பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!
author img

By

Published : Dec 14, 2020, 8:31 PM IST

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதியாக வேலூர் ஆண்கள் சிறையில் முருகன் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய மனைவி நளினி பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக கணவன் - மனைவி இருவரும் 15 நாள்களுக்கு ஒருமுறை வாட்ஸ்-அப் செயலி வழியே காணொலியில் பேசி வருகிறார்கள்.

இந்நிலையில், அவர் தனது குடும்பத்தினரிடம் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கடந்த நவ.23ஆம் தேதியில் இருந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார். சிறை அலுவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் முருகன் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. அவரின் உடல்நிலையை வேலூர் சிறை நிர்வாக மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று அவர் 19ஆவது நாளாக அவர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.

இதனிடையே, முருகனை சந்திக்க அவரது வழக்கறிஞர் புகழேந்தி பாண்டியன் இன்று(டிச. 14) வேலூர் சிறைக்கு வந்தார். முருகனின் உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறி சிறை நிர்வாகம் அவரை சந்திக்க அனுமதி மறுத்ததாக அறியமுடிகிறது.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய புகழேந்தி பாண்டியன், “சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுவரும் முருகனுக்கு இன்று 4 குளுக்கோஸ் பாட்டில்கள் ஏற்றப்பட்டுள்ளன. அவரது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. எழுந்து நடக்கக்கூட முடியாத சூழலில் முருகன் உள்ளதால், அவரை சந்திக்க முடியாது என சிறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வழக்குறிஞரான என்னை சிறைக்குள் அனுமதிக்காததற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

அதேபோல, பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினியையும் சந்திக்க அனுமதிக்கவில்லை. முருகனின் உடல் நிலை குறித்து நளினிக்கு தெரியப்படுத்தக்கூடாது என்பதற்காகவே நளினியை சந்திக்க எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

முருகனையும், நளினியையும் சந்திக்க அனுமதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிட உள்ளோம்‌. மேலும், இவர்கள் இருவரையும் சென்னை புழல் சிறைக்கு மாற்ற கோரிக்கை வைக்க உள்ளோம். புழலுக்கு மாற்ற முடியவில்லை என்றால் மதுரை அல்லது கோவை சிறைக்கு மாற்ற அனுமதி கோர உள்ளோம். மனைவி இருக்கும் சிறையில்தான் தானும் இருப்பேன் என்று முருகன் கூறியுள்ளார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள முருகனை சிறையில் உள்ள மருத்துவமனையிலேயே வைத்து சிகிச்சை அளித்து வருவது கண்டிக்கத்தக்கது. அவரது உயிரை காக்க உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளிக்கும்படி சிறைத்துறை நிர்வாகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். ஆபத்தான நிலையில் உள்ள முருகனின் உயிரை காக்க தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறோம்" என்றார்.

இதையும் படிங்க : மனு எங்கே உள்ளது? பிரக்யா பேச்சில் உள்ளது என்கிறார் திருமா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.