வேலூர் மாநகராட்சியில் தினக்கூலி ஒப்பந்த அடிப்படையில் சுகாதாரப் பணியாளர்கள், குடிநீர் பம்ப் ஆப்பரேட்டர்கள், திடக்கழிவு மேலாண்மை பணியாளர்கள் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்நிலையில், அவர்களுக்கு 2014ஆம் ஆண்டு மார்ச் முதல் ஊதிய உயர்வு வழங்கவில்லை என்று கூறி, இன்று அதனைக் கண்டித்து வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகில் நூற்றுக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் ஊதிய உயர்வு வழங்கக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில பகுஜன் தொழிற்சங்க பொதுச்செயலாளர் பாரதிதாசன் கலந்துகொண்டார்.