இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது வழக்கம். இந்தாண்டு ரமலான் நோன்பு இன்று(ஏப். 14) தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளிவாசல்களிலும் நேற்றிரவு (ஏப். 13) சிறப்பு தொழுகை நடைபெற்றது.
இந்நிலையில், வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் 50 கைதிகள் ரமலான் நோன்பை தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று கடந்த வாரம் சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
இதனையடுத்து, அவர்கள் நோன்பிருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது. இதனைத் தொடர்ந்து, இன்றுமுதல் (ஏப். 14) 50 சிறை கைதிகள் ரமலான் நோன்பை தொடங்கியுள்ளனர்.
இவர்களுக்கு அதிகாலை 4.00 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: 'பயணிகள் எண்ணிக்கை குறைவால் அரசுப் பேருந்துகள் தற்காலிக நிறுத்தம்!'