வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சக்கராகுட்டை கிராமத்தில் தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தண்ணீரின்றி வறண்டிருந்த 52 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தண்ணீர் தேடிவந்த இரண்டு வயது பெண் புள்ளிமான் தவறி விழுந்துள்ளது. இதனை அறிந்த அக்கிராம மக்கள் அருகில் உள்ள தீயணைப்புத் துறையினரைத் தொடர்புகொண்டு தகவல் தெரிவித்தனர்.
அதைத் தொடர்ந்து அங்கு விரைந்துவந்த தீயணைப்புத் துறையினர் 52 அடி ஆழ கிணற்றில் இறங்கி பெண் மானை கயிற்றால் கட்டி கிணற்றிக்கு மேல் பகுதிக்கு கொண்டுவந்தனர். மீட்கப்பட்ட பெண் மான் காட்பாடி அடுத்த காஞ்சாலூர் வனப்பகுதியில் கொண்டுசென்று பாதுகாப்பாகவிட்டனர்.
இதையும் படிங்க: தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த மானைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்த கிராம மக்கள்