ETV Bharat / city

கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற மக்களை கார் ஏற்றி கொல்ல முயற்சி!

வேலூர்: திருப்பத்தூர் அருகே சந்தன மரம் கடத்தல் கும்பலை விரட்டி பிடிக்கச் சென்ற பொதுமக்கள் மீது, காரை ஏற்றி கொல்ல முயற்சித்த கடத்தல் கும்பலை காவல் துறையினர் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

கடத்தல் கும்பல்
author img

By

Published : Oct 27, 2019, 8:40 AM IST

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்மன். இவரது நிலத்தில், சிறிய அளவிலான சந்தன மரங்கள் வளர்ந்துள்ளன. இதனை அறிந்த கடத்தல்காரர்கள் நேற்று இரவு அம்மரங்களை வெட்டியுள்ளனர்.

வெட்டிய மரங்களைக் காரில் கடத்த முயன்றபோது, சத்தம் கேட்டு அங்கிருந்தவர்களை பொதுமக்கள் சுற்றி வளைத்துள்ளனர். இதனால் கோபமுற்ற கடத்தல்காரர்கள், திடீரென ஓடிச்சென்று காரில் ஏறிக் கொண்டு அன்பழகன் என்பவர் மீது காரை ஏற்றிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

#SaveSujith மீண்டு வா சுஜித்! - முதன்மை தகவல்கள் நேரலையில்

இதில் கால்கள் இரண்டும் பலத்த காயம்பட்ட நிலையில், அன்பழகன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். அப்போது அருகே இருந்த சிலர், கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒருவரை மட்டும் பிடித்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

கடத்தல் கும்பலைப் பிடிக்கச் சென்ற மக்கள்; கார் ஏற்றி கொல்ல முயற்சி!

இதனையடுத்து, கந்திலி காவல் நிலையத்தில் கொள்ளையனை ஒப்படைத்துள்ளனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.

Intro:திருப்பத்தூர் அருகே சந்தன மரம் கடத்தல்!. தப்ப முயன்ற கடத்தல் கும்பலை விரட்டி பிடித்தவர்கள் மீது காரை ஏற்றி கொல்ல முயற்சி!. கடத்தல் கும்பலை பிடித்து போலிசார் விசாரணை!.
Body:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த இலக்கிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த நரசிம்மன் என்பவரது நிலத்தில் இருந்த சிறிய அளவிலான சந்தனமரங்கள் வளர்ந்துள்ளன. இதனை அறிந்த கடத்தல்காரர்கள் நேற்று இரவு வெட்டியுள்ளனர். வெட்டிய மரங்களை காரில் கடத்த முயன்றபோது சத்தம் கேட்டு பொதுமக்கள் யார் நீங்கள் என்று கேட்டு சுற்றி வளைத்துள்ளனர். பொதுமக்கள் சுற்றி வளைத்து இதனால் கோபமுற்ற கடத்தல்காரர்கள் திடீரென ஓடி சென்று காரில் ஏறிக் கொண்டு அன்பழகன் என்பவர் மீது காரை ஏற்றி விட்டு தப்பி சென்றுள்ளனர். இந்நிலையில் கால்கள் இரண்டும் இழந்த நிலையில் அன்பழகன் கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அப்போது அருகே இருந்த பொதுமக்கள் கடத்தல் கும்பலை சேர்ந்த ஒருவன் மட்டும் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்துனர் பின்னர் கந்திலி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து போலிசார் வழக்கு பதிவு செய்து தப்பியோடிய மூன்று பேரை தீவிரமாக தேடிவருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.