ETV Bharat / city

வாக்கு எண்ணிக்கை: மையங்களில் மூன்று அடுக்குப் பாதுகாப்பு - காவல் பாதுகாப்பு

வேலூரில் உள்ள ஏழு ஒன்றியங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களுக்கு காவல் துறையின் மூன்று அடுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு

author img

By

Published : Oct 11, 2021, 11:02 PM IST

Updated : Oct 12, 2021, 6:26 AM IST

வேலூர்: தமிழ்நாட்டில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது.

வேலூரில் உள்ள வேலூர், அணைக்கட்டு, கணியம்பாடி, கே.வி. குப்பம், காட்பாடி, பேர்ணாம்பட்டு ஆகிய ஏழு ஒன்றியங்களுக்கான வாக்குப்பதிவு முதல் கட்டமாக கடந்த அக்டோபர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக கடந்த அக்டோபர் 9ஆம் தேதியும் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (அக்.12) நடைபெறவுள்ளது.

வாக்கு எண்ணிக்கை மையங்கள்:

வேலூர் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை தொரப்பாடியிலுள்ள தந்தை பெரியார் பல்தொழில்நுட்ப கல்லூரி, அணைக்கட்டு ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை இறைவன்காட்டிலுள்ள அன்னை பல்தொழில்நுட்ப கல்லூரி, காட்பாடி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை காட்பாடியிலுள்ள அரசு சட்டக் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

கணியம்பாடி ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை கணாதிபதி துளசி ஜெயின் பொறியியல் கல்லூரியிலும், கே.வி. குப்பம் ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை கீழ்புதூர் கிராமத்தில் அமைந்துள்ள வித்தியா லட்சுமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும், பேர்ணாம்பட்டு ஒன்றியத்திற்கான வாக்கு எண்ணிக்கை பேர்ணாம்பட்டில் அமைந்துள்ள மெரிட் ஹாஜி இஸ்மாயில் சாஹிப் கலைக்கல்லூரியில் நடைபெறவுள்ளது.

பாதுகாப்புப் பணிகள்:

இந்த ஏழு வாக்கு எண்ணிக்கை மையங்களிலும் காவல் துறையின் மூன்று அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஒரு மையத்திற்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தலா 100 காவலர்கள் வீதம் ஏழு மையங்களுக்கும் சேர்த்து மொத்தம் 700 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் மையத்திற்குள் வேட்பாளர் மற்றும் வேட்பாளரின் முகவர்களைத் தவிர வேறு எவருக்கும் அனுமதி இல்லை.

வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களின் கைப்பேசியை வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அனுமதிச்சீட்டை காண்பித்தால் மட்டுமே ஊடகத்துறையினர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

வாக்கு எண்ணிக்கை முறை:

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். பிறகு தொடக்க நிலை வாக்குகள் எண்ணப்படும். அதாவது, வாக்குப் பெட்டிகளில் இருந்து வாக்குச்சீட்டுகள் கொட்டப்பட்டு, அதனை வாக்கு எண்ணும் பகுதிக்கு கொண்டு செல்வதே தொடக்க நிலை வாக்கு எண்ணும் பணி எனப்படுகிறது.

அதன் பிறகு காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது தொடங்கும்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தலில் ஆதிக்கம் செலுத்தப் போவது யார்? - நாளை வாக்கு எண்ணிக்கை

Last Updated : Oct 12, 2021, 6:26 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.