திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் ரோட்டரி சங்கம் சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் வழங்கும் விழா அச்சங்க தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. இதில், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவனருள் கலந்துகொண்டார். அரசுப் பள்ளிகளுக்கு குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்களை வழங்கினார்.
அதை தொடர்ந்து சிவனருள் பேசுகையில், “சுகாதாரத்துறையில் 2030ஆம் ஆண்டில் அடைய வேண்டிய இலக்கை 2020 ஆம் ஆண்டிலேயே தமிழ்நாடு அடைந்துள்ளது. அந்தளவில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்பட்டுவருகிறது. அதற்கேற்றார்போல் பொதுமக்கள், குழந்தைகள் சுத்தமாக இருக்க வேண்டும். அதேபோல் டெங்கு உள்ளிட்ட நோய்களை தடுப்பதற்காக தங்களுடைய வீட்டில் சுத்தமாக வைத்து பங்களிக்க வேண்டும்.
பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க வேண்டும் என்ற நோக்கில் ரோட்டரி சங்கம் முன்னெடுத்து அரசுப் பள்ளிகளுக்கு வழங்கிவருவது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய விஷயமாக உள்ளது. ரோட்டரி சங்கம் மேலும் தங்களுடைய பங்களிப்பை அதிகரிக்கும். ஆசிரியர்கள் பள்ளிகளில் குடிநீர் சுத்திகரிப்புச் சாதனங்களை முறையாகப் பாதுகாத்து பயன்படுத்த வேண்டும்” என்றார்.
இதையும் படியுங்க: அறிவியல் கண்காட்சியில் மின்சார சேகரிப்பு குறித்து விழிப்புணர்வு!